வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில் வணிக ஆணையரகத்தின் சமூக ஊடக வலைதளத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் தொழில் வணிகத் துறையின் சார்பில் தொழில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இணையலத்தல் வசதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் முனைவோர்கள் பல்வேறு துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த இணையதளத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.