அறிவியல் பாட தேர்வினை சரியாக எழுதவில்லை என்ற மன வருத்தத்தில் 10 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்!
பிஹார் மாநிலம் சிவான் பகுதியை சேர்ந்தவர் ரித்து குமார்(16), அரசு பள்ளி ஆசிரியரின் மகளான இவர் CBSC பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் தனது அறிவியல் பாட தேர்வினை சரியாக எழுதவில்லை எனவும், பரிட்சையில் தோற்றுவிடுவோம் என்ற பயத்திலும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காவல்துறையின் அறிக்கையின் படி அவர் தனது வீட்டு பால்கனியல், தனது துப்பாட்டாவினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவரது தந்தை சந்தோஷ் குமார், அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தன் மகளது தற்கொலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள இவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவது. நான் என் மனைவி, மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை குடியிறுப்பில் குடியிருந்து வருகின்றோம். இந்நிலையில் தன் இரண்டாவது மகள் ரித்து பரிட்சை தோல்வி பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்ப்பட்டு வருவதாகவதும், பலியான மாணவி உண்மையில் பரிட்சை தோல்வி பயத்தில் தான் இறந்தாரா என்பது குறித்தும் விசாரணை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.