சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை புனே மாநிலத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் IPL போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியிலும் தமிழக இளைஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வைகையினில் வீரர்களின் மீது காலணிகளை வீசினர். எனினும் பெரும் சர்சைக்கிடையில் போட்டிகள் நடந்து முடிந்தன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் சென்னையில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைப்பெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகள் தொடங்கவிருந்த நிலையில் தற்போது இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் வரும் 20-ஆம் தேதி போட்டிகளுக்கான டிக்கெட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
We had decided to hold all IPL matches in Chennai on police's assurance that adequate security would be provided. But today Chennai Police informed CSK that they won't be able to do it. So matches are now being shifted. Pune is one of our options: Rajeev Shukla, IPL chairman pic.twitter.com/QNMwBvaCl8
— ANI (@ANI) April 11, 2018
இந்நிலையில் தற்போது IPL தலைவர் ராஜிவ் சுக்லா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் புனே மாநிலத்தில் நடைப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது... சென்னை போட்டிகள் காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது, ஆனால் தற்போது சென்னை அணியால் விளையாட முடியாது என தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் நடத்த திட்டமிட்ட போட்டிகள் தற்போது வேறு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில் சென்னை போட்டிகளை புனேவில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்!