SC, ST பிரிவினரால் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது. இதன் காரணமாக பஞ்சாப் முழுவதும் முழு அடைப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இன்று +2, 10-ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் SC, ST சட்டத்தின் கடுமையான பிரிவை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
SC, ST சட்டத்தை நீர்த்துபோகச்செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அங்குள்ள தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளன.
முழு அடைப்பு காரணமாக பஞ்சாப்பில் இன்று 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பஞ்சாப்பில் அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும் எனவும் CBSE தெரிவித்து உள்ளது.