ZEEL-Sony இணைப்பு இறுதி கட்டத்தில் உள்ளது: புனித் கோயங்கா

வர்த்தக உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படு ZEEL மற்றும் Sony நிறுவனங்களின் இணைப்பு நடைமுறை இறுதிக் கட்டத்தில்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2021, 07:48 AM IST
  • ZEEL-Sony இணைப்பு இறுதி கட்டத்தில் உள்ளது
  • ZEEL நிர்வாக அதிகாரி புனித் கோயங்கா தகவல்
  • விளையாட்டுத் துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது:புனித் கோயங்கா
ZEEL-Sony இணைப்பு இறுதி கட்டத்தில் உள்ளது:  புனித் கோயங்கா title=

புதுடெல்லி: ZEEL மற்றும் Sony நிறுவனங்களின் இணைப்பு நடைமுறை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ZEEL புனித் கோயங்கா தெரிவித்தார். மேலும் இந்த இணைப்பானது, அனைத்து பங்குதாரர்களுக்கும் பெரும் மதிப்பை உருவாக்கும் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

செவ்வாயன்று நடைபெற்ற APOS இந்தியா உச்சிமாநாட்டில் பேசிய ZEEL நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) புனித் கோயங்கா, ZEEL-Sony இணைப்பு (ZEEL-SONY MERGER), அனைத்து பங்குதாரர்களுக்கும் பெரும் மதிப்பை உருவாக்கும் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

Zee Entertainment Enterprises Limited (ZEEL) மற்றும் Sony Pictures Networks India (SPNI) நிறுவனங்கல் ஒன்று சேர்ந்து பயணிக்கும்  பாதையில் துரிதகதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த திரு.புனித் கோயங்கா, "நிறுவனங்களின் இணைப்புக்கான இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக உள்ளன" என்று தெரிவித்தார் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

"ZEE மற்றும் Sony ஆகியவை நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்கள் ஆகும். தனித்தனியாக எங்களின் வருவாய் $2 பில்லியனுக்கு அருகில் இருக்கும், மேலும் சோனி நிறுவனத்துடன் இணையும்போது  மொத்த மூலதனமானது ($1.575 பில்லியன்) விளையாட்டு உட்பட பிரீமியம் உள்ளடக்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கும். பங்குதாரர்களுக்கு பெரும் மதிப்பை உருவாக்க இது வகை செய்யும்," என்று புனித் கோயங்கா கூறினார்.

ALSO READ: ZEEL போர்டில் மாற்றம் செய்ய வேண்டும்: இன்வெஸ்கோ

பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இணைக்கப்பட்ட நிறுவனம் விளையாட்டில் சிறப்பு கவனம் செலுத்தும் என்று கோயங்கா மேலும் கூறினார். “வாய்ப்பு மிகச் சிறந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பொருளாதார  வாய்ப்புகளை டிஜிட்டல் தளமானது திறந்து விட்டிருக்கிறது. நிச்சயமாக, விளையாட்டுத்துறையில் மக்களின் ஆர்வம் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.

"இணைக்கப்பட்ட நிறுவனம் விளையாட்டுகளில் கவனம் செலுத்தும். நாங்கள் சோனியுடன் விளையாட்டுகளில் போட்டியிடாமல் முடித்தோம், அது முழு வட்டத்தில் வருகிறது,” என்று ZEEL நிர்வாக அதிகாரி புனித் கோயங்கா (Punit Goenka, Managing Director and Chief Executive Officer) தெரிவித்தார்.  கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு, 4-5 கோடி மக்கள் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை என்பதையும் கோயங்கா சுட்டிக்காட்டினார்.

"மக்கள் விளையாட்டுத் துறைக்காக பெரிய அளவில் பணம் செலுத்தாமல் இருக்கலாம், ஆனால் செலுத்த தயாராக உள்ளனர். அந்த எண்ணிக்கை அதிவேகமாக வளரும். இந்தியாவில், சந்தா வீடியோ ஆன் டிமாண்ட் ( subscription video on demand (SVOD)) சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 கோடியாக வளரும்," என்று அவர் கூறினார்.

ALSO READ: ZEEL-Sony Merger: இணையும் இரு மீடியா ஜாம்பவான்கள், முக்கிய அம்சங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News