பண பரிமாற்றத்தில் உங்கள் Aadhaar எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது? இப்படி தெரிந்து கொள்ளலாம்

உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, ​​எங்கு, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதை மிகவும் எளிதாக செய்ய முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 11:21 AM IST
  • ஆதார் வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அவசியமாக்கியுள்ளது.
  • ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது ஆதார் எனேபில்ட் கட்டண முறை பயன்படுத்தப்படுகிறது.
  • ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, ​​எங்கு, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.
பண பரிமாற்றத்தில் உங்கள் Aadhaar எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது? இப்படி தெரிந்து கொள்ளலாம் title=

Aadhaar: நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார் வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும் அவசியமாக்கியுள்ளது. பல முறை, பண பரிவர்த்தனைகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது ஆதார் எனேபில்ட் கட்டண முறை பயன்படுத்தப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, ​​எங்கு, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதை மிகவும் எளிதாக செய்ய முடியும்.

UIDAI வலைத்தளத்தின் உதவியுடன் இதை செய்யலாம்.

uidai.gov.in என்ற UIDAI வலைத்தளத்தின் மூலம் நீங்கள் அங்கீகார சரிபார்ப்பை பற்றி அறிந்து கொள்ளலாம். சில கிளிக்குகளில் இந்த வலைத்தளத்தின் உதவியுடன், இந்த தகவலை நாம் பெறலாம். இதன் மூலம் உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் அறிய முடியும்.

ஆதார் அட்டை எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை பார்க்கும் முறை:

- முதலில் ஆதார் அட்டையை (Aadhaar Card) வழங்கும் அமைப்பான UIDAI-ன் வலைத்தளமான https://uidai.gov.in –க்கு செல்லவும்.

-முகப்பு பக்கத்தில் கீழே சென்று, ‘Aadhaar Services’ பிரிவுக்குச் செல்லவும்.

ALSO READ: Aadhaar அட்டையின் முக்கியத்துவத்தை அரசு அதிகரிக்கப் போகிறது!

-இந்த பக்கத்திலும் ஸ்க்ரோல் டௌன் செய்து ‘Authentication History’ பிரிவில் கிளிக் செய்யவும்.

-இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்தைப் பெறுவீர்கள். இதில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்களிடம் 16 இலக்க மெய்நிகர் ஐடி இருந்தால் இந்த ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம்.

-எண்ணை உள்ளிட்ட பிறகு, கீழே உள்ள பாதுகாப்பு குறியீட்டை கேப்ட்சாவாக உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

-இதைச் செய்தபின், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP ஐப் பெறுவீர்கள். அதை திறந்திருக்கும் பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ளிட வேண்டும். அதற்கு முன், அதே பக்கத்தில் நீங்கள் மேலே உள்ள ‘Authentication Type’ பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

-இதற்கு சற்று கீழே, எந்த தேதி முதல் எந்த தேதி வரையிலான தகவலைப் பெற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். பின்னர் பதிவுகளின் எண்ணிக்கையை (Number of Records) தீர்மானிக்க வேண்டும். இதன் அதிகபட்ச வரம்பு 50 ஆகும். நீங்கள் ஏற்கனவே OTP ஐ கீழே உள்ளிட்டுள்ளீர்கள்.

-இதற்குப் பிறகு, Verify OTP என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் முன் முழு Authentication History-யும் ஓப்பன் ஆகும்.

- பக்கத்தின் இறுதியில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியும் உள்ளது. நீங்கள் விரும்பினால் அதை பதிவிறக்கம் செய்யலாம்.

ALSO READ: ஆதார் அட்டை தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதுதான் முதலிடம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News