ஒரு வருடத்தில் 42 லட்சம் ரூபாய்க்கு ஸ்விக்கியில் ஆர்டர் போட்ட மும்பை மனிதர் யார்?

Swiggy Customer Of Year 2023: How India Swiggy'd in 2023 என்ற அறிக்கை வெளியாகி, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் உணவு பழக்கங்களும் விருப்பங்களும்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 16, 2023, 10:00 PM IST
  • ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் உணவு பழக்கங்களும்
  • ஸ்விக்கி 2023 சிறந்த கஸ்டமர்
  • 50 லட்சம் ரூபாய்க்கு ஸ்விக்கியில் சாப்பிடும் மனிதர்
ஒரு வருடத்தில் 42 லட்சம் ரூபாய்க்கு ஸ்விக்கியில் ஆர்டர் போட்ட மும்பை மனிதர் யார்?  title=

How India Swiggy'd in 2023: உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் இந்த ஆண்டு அறிக்கை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. ஒருவர் 2023 ஆண்டில் மட்டும் 42.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி சொல்லும் தகவல் வியப்பளிக்கிறது. ஆண்டறிக்கையில், இணையத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ள ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்த உணவு எது தெரியுமா?

ஹைதராபாத் பிரியாணி

தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது மற்றும் பிளாட்ஃபார்ம் மூலம் ஆர்டர் செய்யப்படும் நாட்டின் மிகவும் விருப்பமான உணவாக வெளிவந்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ரூ. 42.3 லட்சம் மதிப்புள்ள உணவு ஆர்டர்

மும்பையைச் சேர்ந்த ஒரு பயனர் ரூ. 42.3 லட்சம் மதிப்புள்ள உணவு ஆர்டர்களை செய்தார்  என்று Swiggy தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கர்ப்பிணிகளே... ‘இந்த’ பழங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க..!

முதலிடத்தில் உள்ள உணவுகள்

அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் கேக், குலாப் ஜாமூன் மற்றும் பீட்சா போன்ற உணவுகளும் இடம் பிடித்துள்ளன. ஆனால், பிரியாணி மீதான மக்களின் அன்பு ஈடு இணையற்றது என்பது அறிக்கையில் வழங்கப்பட்ட புள்ளி விவரங்களில் பிரதிபலிக்கிறது.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

மக்கள் ஆண்டு முழுவதும் ஒரு நொடிக்கு 2.5 பரிமாணங்கள் என்ற விகிதத்தில் பிரியாணியை ஆர்டர் செய்திருப்பது தான் அதிர்ச்சியை அளிக்கிறது. ஸ்விக்கியின் தரவரிசையில் பிரியாணி எப்போதும் முதலிடத்தில் உள்ளது, இந்த ஆண்டு மட்டுமல்ல, ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளில் பிரியாணி தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடத்தில் உள்ளது

பிரியாணிப் பிரியர்

ஹைதராபாத் உணவு பிரியர் ஒருவர் பிரியாணி பிரியர் என்று பெயர் பெறுகிறார். ஏனென்றால், அவர் 2023ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,633 பிரியாணிகளுக்கு ஆர்டர் செய்தார். அதாவது தினசரி நான்கு பிளேட்டுகளுக்கு மேல் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

மேலும் படிக்க | கண்பார்வை மேம்பட வேண்டுமா? ‘இந்த’ 2 உணவுகளை சாப்பிடுங்கள் போதும்!

அசைவ உணவு பட்டியல்

அசைவ உணவுகளில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருந்தாலும், சைவ உணவு உண்பவர்களும் பிரியாணி ஆர்டர் செய்வதில் சளைக்கவில்லை. ஆனால், சிக்கன் பிரியாணிக்கும், சைவ பிரியாணிக்கும் உள்ள விகிதம் 1: 5.5. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, ஒரு சண்டிகர் குடும்பத்தினர் ஒரே நேரத்தில் 70 பிளேட் உணவு ஆர்டர் செய்ததும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.  

ஜான்சியை சேந்த ஒருவர் ஒரே நாளில் 269 பொருட்களை ஆர்டர் செய்து அசத்தினார். இதற்கிடையில், புவனேஷ்வரில், ஒரு குடும்பம் பீட்சா விருந்துக்கு 207 பீட்சாக்களை ஆர்டர் செய்தது.

8.5 மில்லியன் சாக்லேட் கேக் ஆர்டர்களுடன் பெங்களூரு ‘கேக் கேபிடல்’ ஆனது; மாறாக, காதலர் தினத்தன்று நாடு முழுவதும் கூட்டாக நிமிடத்திற்கு 271 கேக்குகளை ஆர்டர் செய்தார்கள் என ஸ்விக்கி கூறுகிறது.

மேலும் படிக்க | உணவுடன் ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ளவும் எடையை நிர்வகிக்கவும் ஹெல்த் டிப்ஸ்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News