இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் பல வகைகளில் அவசியமாக தேவைப்படும் ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களின் பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் (DigiLocker) என்பது ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடியால் ஜூலை 2015 இல் தொடங்கப்பட்டது.
டிஜி லாக்கரில் வைத்தால், உங்கள் பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) அட்டை, பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம்.
டிஜிட்டல் முறையில் கிடைக்கக்கூடிய லாக்கர் வசதியை நீங்கள் பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கலாம்.
டிஜிலோகர் என்றால் என்ன
டிஜிட்டல் லாக்கர் (Digital Locker) அல்லது டிஜிலாக்கர் ( DigiLocker) என்பது ஜூலை 2015 இல் பிரதமர் நரேந்திர மோடி (PM Narenda modi) அறிமுகப்படுத்திய ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் (digital india) கீழ் டிஜிலாக்கர் தொடங்கப்பட்டது.
இதனை தேவைப்படும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்
டிஜிலாக்கரின் உதவியுடன், உங்கள் முக்கியமான ஆவணங்கள் எதையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இது தவிர, நீங்கள் இந்த லாக்கரைப் பயன்படுத்தினால், நீங்கள் அந்த ஆவணத்தை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. அதாவது, இதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்
மேலும் படிக்க | Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!
உபயோகிப்பது எப்படி
இதில் கணக்கை தொடக்க, முதலில் digilocker.gov.in அல்லது Digitallocker.gov.in என்ற வலைதளத்திற்குச் செல்லவும். பின்னர் தளத்தின் வலது பக்கத்தில் சைன் அப் ( Sign Up) என்பதைக் கிளிக் செய்க.உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட ஒரு புதிய பக்கம் தோன்றும்.
நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் ஒரு OTP ஐ அனுப்பும்.பயனர் பெயர் அதாவது யூஸர் நேம் மற்றும்பாஸ்வேர்டை அமைக்கவும். பின்னர், டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம்.
ஆவணத்தை எவ்வாறு சேமிப்பது?
உங்கள் ஆவணத்தை டிஜிலாக்கரில் சேமிக்க, உங்கள் எல்லா ஆவணங்களையும் ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களின் தெளிவான புகைப்படத்தையும் கிளிக் செய்யலாம், அதன் பிறகு நீங்கள் அதை டி.ஜி. லாக்கரில் சேமிக்க வேண்டும்.
முதலில் டிஜிலாக்கரில் லாகின் செய்யவும்
தளத்தின் இடது பக்கத்தில் Uploaded Documents சென்று அப்லோட் என்பதைக் கிளிக் செய்க. உங்கள் ஆவணத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுதுங்கள். அப்லோட் என்ற பொத்தானைக் கிளிக் செய்க. உங்கள் ஆவணங்கள் இப்போது டிஜி லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR