நாட்டின் பாதுகாப்பான வங்கிகள் இவைதான்: ரகசியத்தை போட்டுடைத்த RBI

Safest Banks in India: இந்தியாவின் வங்கித் துறை மிகப் பெரியது. இதில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் போன்ற பல வகையான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2024, 01:37 PM IST
  • பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமா?
  • எந்த வங்கியில் கணக்கை திறக்கலாம் என குழப்பத்தில் உள்ளீர்களா?
  • அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
நாட்டின் பாதுகாப்பான வங்கிகள் இவைதான்: ரகசியத்தை போட்டுடைத்த RBI title=

Safest Banks in India: பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமா? எந்த வங்கியில் கணக்கை திறக்கலாம் என குழப்பத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். நாட்டின் மிக பாதுகாப்பான வங்கிகளின் விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ இந்த தகவலை வெளியிட்டு சில நாட்கள் ஆகிவிட்டன என்றாலும், பாதுகாப்பான வங்கி என்றால் எப்படி இருக்க வேண்டும்? அவற்றை பற்றி ரிசர்வ் வங்கி கூறியுள்ள தகவல்கள் என்ன என்பதை தெரிந்துகொண்டால் உங்களுக்கான வங்கியை தேர்தெடுப்பதில் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

இந்திய வங்கிகள்

இந்தியாவின் வங்கித் துறை மிகப் பெரியது. இதில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் (Banks) போன்ற பல வகையான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உள்ளன. இந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சரியாக பணியாற்றுவதை உறுதி செய்வது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கடமையாகும். 

விதிமுறைகளை மீறும் வங்கிகள்

வழிமுறைகளை மீறி, சட்டங்களை மதிக்காமல், விதிகளை மீறிய செயல்களில் ஈடுபடும் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கண்காணித்து தண்டனை அளிக்கின்றது. இவற்றின் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இவற்றின் சில செயல்பாடுகளுக்கு தடைகளும் விதிக்கப்படுகின்றன. சமீபத்திலும் பல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் சிக்கியதை கண்டோம்.

ரிசர்வ் வங்கி பாராட்டும் வங்கிகள்

ரிசர்வ் வங்கியின் பாராட்டுகளை பெற்ற வங்கிகளும் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. நாட்டில் உள்ள மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சில நாட்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி' பட்டம் பெற்ற அந்த வங்கிகளை பற்றி இங்கே காணலாம். 

தோல்வியடைய வாய்ப்பே இல்லாத வங்கிகள்

சில நாட்களுக்கு முன், ரிசர்வ் வங்கி, எப்போதும் தோல்வியடைவதாற்கான வாய்ப்பே இல்லாத நாட்டின் 3 வங்கிகள் பற்றி கூறியது. இந்த வங்கிகளின் பட்டியலை ஆர்பிஐ வெளியிட்டது.

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு இருந்தால் கூட வருமான வரி நோட்டீஸ் வரும்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் எச்டிஎஃப்சி வங்கியும் (HDFC Bank) ஆகிய இரு தனியார் துறை வங்கிகள் என இந்த மூன்று வங்கிகள் மிகவும் பாதுகாப்பான வங்கிகள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவை வாடிகையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான வங்கிகள் என்றும், இவற்றில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

D-SIB வங்கிகள்

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாத பெரிய வங்கிகள் D-SIB -கள் என்று அழைக்கப்படுகின்றன. 'தோல்வியடைய முடியாத வகையில் மிகப்பெரிய வங்கிகள்' (‘too big to fail’) என்ற கருத்தின் கீழ், அத்தகைய வங்கிகள் ஏதேனும் நெருக்கடியை சந்திக்கும் போது, அரசு அவற்றுக்கு ஆதரவளித்து, அவை மூழ்காமல் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட வங்கிகள் நிதி சந்தையில் சில கூடுதல் வசதிகளைப் பெறுகின்றன. மேலும் இந்த வங்கிகள் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அதிமாக இருக்கின்றது. 

மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: 1% வட்டி விகிதத்தில் PPF-இல் கடன் பெறலாம்... விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News