மிடில் கிளாஸ் மக்களுக்கு கொண்டாட்டம்: மத்திய அரசின் புதிய வீட்டு வசதி திட்டம்

Middle Class Housing Scheme: 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2024, 01:53 PM IST
  • இந்த திட்டம் PMAY-இன் ஒரு அங்கமா?
  • இந்தத் திட்டம் நடுத்தர மக்களுக்கு எவ்வாறு உதவும்?
  • பயனாளிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மிடில் கிளாஸ் மக்களுக்கு கொண்டாட்டம்: மத்திய அரசின் புதிய வீட்டு வசதி திட்டம் title=

Middle Class Housing Scheme: நடுத்தர மக்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது!! நடுத்தர வர்க்க மக்களுக்காக, அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் நடுத்தர மக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தைப் பற்றி அறிவித்தார். எனினும், இந்த அறிவிப்பு இந்த மாதம் தான் வந்தது. இதற்கு முன்னரே பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு வீடு கட்டவும், வாங்கவும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்போது 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.

அனைவருக்கும் வீடு

இந்த வீட்டு வசதி திட்டத்தின் (Housing Scheme) கீழ், வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், சேரிகள் மற்றும் சட்டவிரோத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் சொந்த வீடுகள் வாங்கவோ, கட்டவோ அரசு நிதியுதவி அளிக்கும். அரசு நடத்தும் இந்தத் திட்டம் ‘அனைவருக்கும் வீடு’ (Housing for All) கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படும். 

இந்த திட்டம் PMAY-இன் ஒரு அங்கமா?

நிதி அமைச்சர் (Finance Minister) அறிவித்த இந்தத் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (PMAY) ஒரு அங்கமா? அதன் நீட்டிப்பா? என்ற கேவி பலரிடம் உள்ளது. ஆனால், இது PMAY திட்டத்தின் நீட்டிப்பு அல்ல. இது ஒரு புதிய திட்டமாக வரும். இத்திட்டத்தின் பயனாளிகள், அவர்களது பணம் ஈட்டும் நிலை, இருப்பிடம் மற்றும் வீட்டின் வகை போன்ற தகவல்களைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்தத் திட்டம் நடுத்தர மக்களுக்கு எவ்வாறு உதவும்?

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் (Middle Class) வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வர்க்கத்தின் அளவும், திறனும், முன்னேற்றமும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நடுத்தர வர்க்கம்’ என்ற பிரிவிற்குள் எந்த மக்கள் வருகிறார்கள்? இன்றைய காலத்தில் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் (Upper Middle Class), கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் (Lower Middle Class), என்றெல்லாம் பிரிவுகள் உள்ளன. ஆனால் நடுத்தர வர்க்கம் என அரசாங்கம் எந்த மக்களை கூறுகிறது? 

இந்த திட்டத்தை எடுத்துக்கொண்டால், இத்திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் காண அரசு தயாரிக்கும் தரநிலைகள் வெளிவந்தால்தான், இந்தியாவை பொறுத்தவரை யார் நடுத்தர வர்க்கத்தினர் என்பதில் தெளிவு கிடைக்கும், தற்போது, புதிய நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் விரைவில் வர வாய்ப்பில்லை.

மேலும் படிக்க | ஒன்றுக்கு மேற்பட்ட EPF கணக்குகளை ஒன்றிணைப்பது எப்படி? முழு செயல்முறை இதோ

பயனாளிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

வருமானம் பெறும் நிலை, வசிக்கும் இடம் மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில் அரசு இத்திட்டத்திற்கு பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த அடிப்படையில், நடுத்தர வர்க்கத்தின் வரையறையை அரசாங்கம் செய்யக்கூடும். இன்னும் சில நாட்களின், யார் யார் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற தகவலை மத்திய அரசாங்கமே (Central Government) வெளியிட வாய்ப்புள்ளது. 

இந்தியாவின் நடுத்தர வர்க்கம்

இந்தியாவை காட்டிலும் மேற்கத்திய நாடுகளில் நடுத்தர வர்க்கம் குறித்து அதிக தெளிவுகள் உள்ளன. அந்த நாடுகளில் மிகவும் வசதியான குடும்பங்கள் நடுத்தர வர்க்கமாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கான தெளிவான வரையறை எதுவும் இல்லை. இந்த வர்க்கத்தை சரியான வரையறுக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்தின் கீழ் வருவதாக, இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி (PRICE) 2022 அறிக்கை தெரிவிக்கின்றது. நடுத்தர வர்க்கம் என்று தங்களை விவரிக்கும் பலர் நாட்டின் அதிக வருமானம் ஈட்டும் மக்கள்தொகையில் முதல் 1-5 சதவீதத்தில் இருக்கலாம் என்று 10 ஆண்டுகள் பழமையான தரவுகளை கொண்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. எனினும், சமீபத்திய நுகர்வோர் செலவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் கிடைத்த பின்னரே இது தொடர்பான தரவுகள் பற்றிய சரியான தகவல் பற்றிய தெளிவு கிடைக்கும். 

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News