நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் GST கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஜிஎஸ்டியின் 52வது கூட்டமாகும். ஜிஎஸ்டி விவகாரங்களுக்கான உச்ச அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டம் அக்டோபர் 7ம் தேதி நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டம்
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டத்தில் சிறுதானையங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை (Goods and Services Tax) குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறு தானியங்களின் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை பூஜ்ஜியமாகக் குறைக்கலாம். இதனுடன், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இருப்பினும், அக்டோபர் 1 முதல், அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும். அதை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!
51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
முன்னதாக, 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 2, 2023 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கேசினோ, குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி கட்டணங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில், மூன்று கேமிங்கிற்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கலை தீர்க்க வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகஸ்ட் 2ம் தேதி கூடி ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜிஎஸ்டி விகிதங்கள் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன. தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் அக்டோபரில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், அப்பளம் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனுடன், இஸ்ரோ (ISRO), நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Antrix Corporation Limited) மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ