இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பண மதிப்பாய்வுக் கொள்கையின் முடிவுகளை வெளியிட்டதுடன், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி கணித்துள்ள மதிப்பீட்டின்படி, இந்த நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.4 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் 6.2 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; மாதம் ₹50,000 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்!
இந்நிலையில் தற்போது நீங்கள் யுபிஐ பேமெண்டில், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும். இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ கட்டணம் செலுத்தும் வசதியை வழங்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த வசதியானது ரூபே கிரெடிட் கார்டுடன் தொடங்கப்பட போகிறது, அதன்பின்னர் சில நாட்கள் கழித்து மற்ற கார்டுகள் மூலமாகவும் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. தொற்று நோய் பரவலுக்கு முன்னர் உற்பத்தி வளர்ச்சி எப்படி இருந்ததோ அதைவிட அதிகமாக தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ