IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு இனி எளிது, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

IRCTC Train Ticket Booking By Speech: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக IRCTC அவ்வப்போது பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில், AI சாட்போட் AskDisha 2.0 ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2024, 09:54 AM IST
  • இந்திய ரயில்வே AI சாட்போட் (AI Chatbot) சேவையைத் தொடங்கியுள்ளது.
  • இனி பயணிகள் பேசி தங்களின் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
  • AskDisha 2.0 இல் பிற தகவல்களையும் வழங்கும்.
IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு இனி எளிது, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

IRCTC Train Ticket Booking By Speech AI Chatbot AskDisha 2.0 : இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. இந்த இந்திய ரயில்வேயில் தினம் தோறும் கோடிக்கணக்கான பயணிகள் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடிகிறது. அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும். இத்தகைய சூழ்நிலையில், பயணிகளின் வசதிக்காக சிறப்பான சேவை ஒன்றை ரயில்வே துறையால் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ஐஆர்சிடிசியின் இந்தச் சேவையின் மூலம், பயணிகள் பேசி தங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவது வரை, இந்திய ரயில்வே AI சாட்போட் (AI Chatbot) சேவையைத் தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வே தொடர்பான சேவைகளுக்காக AskDisha 2.0 என்ற AI Chatbot வசதியை தொடங்கியுள்ளது. இதன் மூலம், இனி பயணிகள் பேசி தங்களின் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி AskDisha 2.0 இல் பிற தகவல்களை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

இந்த AI சாட்பாட் (AI Chatbot) பயணிகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் பணத்தைத் திரும்பப்பெறுதல் அதாவது ரீஃபண்ட் பெறுதல் வரை அனைத்து சேவைகளையும் வழங்குகிறது, மேலும் இதன் உதவியுடன் பயணிகள் முக்கியமான தகவல்களையும் பெற முடியும்.

AskDisha 2.0 என்றால் என்ன?

AskDisha 2.0 என்பது 24/7 செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML) மற்றும் NLP அடிப்படையிலான மெய்நிகர் உதவியாளர் சாட்போட் ஆகும். இது பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும், போர்டிங் ஸ்டேஷனை மாற்றவும், ரீஃபண்ட்டை பெறவும், PNR நிலையை சரிப்பார்க்கவும், சலுகையைப் பற்றி அறியவும் மற்றும் IRCTC வழங்கும் பல்வேறு சேவைகள் பற்றிய தகவல்களை நாம் பெறலாம். இந்த AI சாட்போட் மூலம், ஒரே ஒரு OTP மூலம் ரயில் இ-டிக்கெட் முன்பதிவு சாத்தியமாகியுள்ளது.

மேலும் படிக்க | பெண்களுக்கு கைநிறைய வருமானத்தை அள்ளித்தரும் சிறு தொழில்கள்! என்னென்ன தெரியுமா?

இந்த AI சாட்பாட் வாய்ஸ் கமாண்ட்டை ஆதரிக்கிறது மற்றும் வாய்ஸ் கமாண்ட் ஐ பயன்படுத்தி இந்த சேவையைப் பெறலாம். மேலும் இந்த ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விரைவான மற்றும் எளிதான வழியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

AskDisha 2.0 ஐ எப்படி பயன்படுத்துவது?

* AskDisha 2.0 ஐ IRCTC இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் கிடைக்கும். 

* இதற்கு IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

* AskDisha 2.0 லோகோ முகப்புப் பக்கத்தின் கீழே தெரியும்.

* AskDisha 2.0 இல் தேவையான தகவலை நிரப்பவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் உங்கள் query ஐ செய்யவும்.

* இது தவிர, ‘மைக்ரோஃபோன்’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலமும் query ஐ நிரப்பலாம்.

* இது தவிர, உங்கள் மொபைலில் AskDisha 2.0 ஐப் பெற IRCTCWell Connect பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

* பின்னர், AskDisha 2.0 ஐகானைப் பார்த்து, உங்கள் query ஐ பேசி தொடங்கவும்.

AskDisha 2.0 என்னென்ன சேவைகளை வழங்கும்?

* ரயில் டிக்கெட் முன்பதிவு

* pnr சரிபார்ப்பு

* டிக்கெட் ரத்து

* ரீஃபண்ட்

* போர்டிங் நிலையத்தை மாற்றுதல்

* முன்பதிவு ஹிஸ்டரி ஐ சரிபார்ப்பு

* மின் டிக்கெட்டைப் பார்க்க

* ERS ஐ பதிவிறக்க

* மின் டிக்கெட்டுகளை அச்சிடுதல் மற்றும் பகிர்தல்.

மேலும் படிக்க | Paytm Deadline March 15: காலக்கெடுவுக்கு பிறகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News