TDS refund: உங்கள் டிடிஎஸ் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிகள்!

TDS refund: ஊழியரது சம்பளத்திலிருந்து டிடிஎஸ் வரி வடிவில் கழிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினை, அந்த ஊழியர் சார்பாக அவரது முதலாளி அரசாங்கத்திடம்  டெபாசிட் செய்வார்.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2023, 09:15 AM IST
  • ஊழியரின் சம்பளத்திலிருந்து முதலாளியால் கழிக்கப்படும் வரி தான் டிடிஎஸ்.
  • 2022-23 நிதியாண்டுக்கான ஐடிஆர் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31, 2023 ஆகும்.
  • ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் டிடிஎஸ் தொகையை சரிபார்க்கலாம்.
TDS refund: உங்கள் டிடிஎஸ் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிகள்! title=

TDS refund: ஒரு ஊழியருக்கு சம்பளத்தை கொடுக்கும்போது அந்த முதலாளியால் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் வரி தான் சம்பளத்தின் மீதான டிடிஎஸ் என்று அழைக்கப்படுகிறது.  ஊழியரது சம்பளத்திலிருந்து டிடிஎஸ் வரி வடிவில் கழிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினை, அந்த ஊழியர் சார்பாக அவரது முதலாளி அரசாங்கத்திடம்  டெபாசிட் செய்வார்.  உங்கள் முதலாளி எப்பொழுதெல்லாம் உண்மையான வரிப் பொறுப்புக்கு மேல் டிடிஎஸ் வரியை கழிக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் டிடிஎஸ் ரீஃபண்ட் க்ளைம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  டிடிஎஸ் தொகை உங்கள் உழைப்பிலிருந்து செலுத்தப்படும் தொகை என்பதால் அந்த பணத்தின் நிலையை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  உங்களின் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலமும், ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் உங்கள் டிடிஎஸ் தொகையைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.  வரி செலுத்துவோர் தங்கள் வரி விலக்குகளை சரிபார்த்து, வரிகளை தங்கள் ஊதியக் கணக்கில் செலுத்த வேண்டும்.  வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கில் விலக்குகளைக் குறிப்பிட்டு டிடிஎஸ் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.  வருமான வரித் துறையால் இது சரிபார்க்கப்பட்டு பிறகு, இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் அதிகப்படியான தொகை திரும்பப் பெறப்படும்.  2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2023 ஆகும்.

மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைனில் டிடிஎஸ் தொகையை சரிபார்ப்பதற்கான வழிகள்:

1) அதிகாரப்பூர்வ இணையதளமான www.tdscpc.gov.in/app/tapn/tdstcscredit.xhtml என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2) இணையதள பக்கத்திற்கு சென்றதும், அந்த பக்கத்தில் வெரிஃபிகேஷன் கோடை நிரப்பும்படி கேட்கப்படும். அதன்படி அதில் நீங்கள் வெரிஃபிகேஷன் கோடை உள்ளிட்ட பிறகு, 'தொடரவும்' என்கிற பட்டனை கிளிக் செய்யவேண்டும்.

3) அதனைத்தொடர்ந்து, உங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) மற்றும் டான் (வரி விலக்கு மற்றும் வசூல் கணக்கு எண்) ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும்.  இதில் நீங்கள் விரும்பும் நிதியாண்டு, காலாண்டு மற்றும் வருமான வகை ஆகியவற்றையும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

4) தேவையான அனைத்து விவரங்களையும் இணையதள பக்கத்தில் நீங்கள் நிரம்பியதும், 'GO' என்கிற பட்டனை க்ளிக் செய்யவேண்டும்.  பின்னர் உங்களுக்கு தேவையான விவரங்கள் இணையதள பக்கத்தின் திரையில் காண்பிக்கப்படும்.

மேற்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முக்கியமான டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொடர்பான தகவல்களை நீங்கள் சில மணி நேரங்களில் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.  மேலும் இந்த இணையதள பக்கங்களில் நீங்கள் வரி விலக்குகள் மற்றும் வசூல் தொடர்பான அனைத்து அப்டேட்டுகளையும் தெரிந்துகொள்ள முடியும்.  பிரிவு 194-IB இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்ட டிடிஎஸ் சான்றிதழ், 194M பிரிவின் கீழ் விலக்கப்பட்ட வரிக்கான டிடிஎஸ் சான்றிதழ், 194S பிரிவின் கீழ் விலக்கப்பட்ட வரிக்கான டிடிஎஸ் சான்றிதழ் போன்றவற்றை மே 15, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  புதிய வரி விதிப்பின்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பல வகையான வரி விலக்குகள் வழங்கப்படுகிறது.  ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்திற்குள் இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை மற்றும் வரிக்கு உட்பட்ட வருமானத்தை விட அதிகம் பெற்றால் வரி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News