Post Office அசத்தல் திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், திட்ட முடிவில் அதிரடி வரவு

Post Office Time Deposit Scheme: தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டம் ஆபத்து இல்லாத வருமானத்திற்கான சிறந்த வழியாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 03:38 PM IST
  • இதன் மெச்யூரிட்டி 1-5 ஆண்டுகள்.
  • வட்டியிலேயே நல்ல தொகை கிடைக்கும்.
  • 5 வருட கால வைப்புத்தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்.
Post Office அசத்தல் திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், திட்ட முடிவில் அதிரடி வரவு title=

போஸ்ட் ஆஃபீஸ் டிடி கணக்கீடு: அதிக ஆபத்து இல்லாத, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய இடத்தில் உங்கள் பணத்தை 5 ஆண்டுகளுக்கு சேமிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால், தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டம் ஆபத்து இல்லாத வருமானத்திற்கான சிறந்த வழியாகும். இந்த திட்டங்களில் ஒன்றுதான் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் டைம் டெபாசிட் (TD) திட்டம். இந்தத் திட்டத்தில், 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு ஒரே நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில், ஆண்டு அடிப்படையில் வட்டி கிடைக்கும்.

தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்கள்

1 ஆண்டுக்கான தபால் அலுவலக நேர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 6.90 சதவீதம் ஆகும். 2 ஆண்டுகளுக்கு இது 7 சதவீதமாக உள்ளது. இது தவிர, 3 ஆண்டு டெபாசிட்டுக்கு 7 சதவீத வட்டியும், 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 7.5 சதவீத ஆண்டு வட்டியும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் 1 ஜூலை முதல் 30 செப்டம்பர் 2023 வரை பொருந்தும்.

5 லட்ச ரூபாய்க்கு 5 ஆண்டுகளில் இவ்வளவு வட்டி கிடைக்கும்

போஸ்ட் ஆஃபீஸ் TD கால்குலேட்டரின் படி, 5 வருடத்திற்கு 5 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் ரூ. 7,24,974 கிடைக்கும். அதாவது, வட்டி மூலம் ரூ.2,24,974 கிடைக்கும். தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களின் வைப்பு விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்கள் மாறலாம். இருப்பினும், டெபாசிட் செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் முழு காலத்திற்கும் பொருந்தும்.

மேலும் படிக்க | New Tax Regime vs Old Tax Regime முக்கிய அப்டேட்: எது அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது?

5 வருட TD -யில் வரி விலக்கு கிடைக்கும்

அஞ்சல் அலுவலகத்தில் 5 வருட TD  -க்கு வரி விலக்கு கிடைக்கும். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ், ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் வரி விலக்கு பெறலாம். TD -யில் முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்பதை இங்கே நினைவில் கொள்ளவும்.

TD: விதிகள் இதோ

போஸ்ட் ஆபிஸ் TD -யின் கீழ் ஒற்றை (Single) மற்றும் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்கலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் 3 பெரியவர்கள் சேரலாம். இந்தக் கணக்கை குறைந்தபட்சம் ரூ. 1000-ல் தொடங்கலாம். இதற்குப் பிறகு, ரூ. 100 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டில் முதலீட்டு வரம்பு இல்லை.

முதலீட்டாளர்கள் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம்

ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கை நீட்டிக்க விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு, அவர் அதை அதே காலத்திற்கு நீட்டிக்க முடியும். ஒரு முதலீட்டாளர் தனது பெயரில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆண்டு அடிப்படையில் பெற்ற வட்டித் தொகையை எடுக்காவிட்டாலும், அது டெட் மணியாக கணக்கில் அப்படியே இருக்கும். இதில் தனி வட்டி கிடைக்காது. 

இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.

மெலும் படிக்க | ஆக்சிஸ் வங்கியில் டிஜிட்டல் கிசான் கிரெடிட் கார்டு அறிமுகம் - இதோ முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News