நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து நம் நாட்டு பங்குச் சந்தை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. தேசிய பங்குச்சந்தையும் மும்பை பங்குச் சந்தையும் முன்னெப்போதும் காணாத உயர் நிலைகளில் உள்ளன. இருப்பினும், சந்தைகள் புதன்கிழமை கிட்டத்தட்ட ஏற்ற இறக்கம் ஏதுமில்லாத நிலையில் முடிந்தன. அமர்வு முடிவில், சென்செக்ஸ் முந்தைய அமர்விலிருந்து 19.69 புள்ளிகள் குறைந்து 51,309.39 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 2.80 புள்ளிகள் சரிந்து 15,106.50 ஆக இருந்தது.
பங்குச் சந்தையின் ஏற்றத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் அதிகளவில் தற்போது முதலீடு செய்கிறார்கள். இதற்கிடையில், டயர் தொழிற்துறையின் பங்குகளில் (Shares) ஒரு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. MRF பங்கு பற்றி பேசுகையில், இது சுமார் 1 லட்சம் ரூபாயை எட்டவுள்ளது. அதன் விலை பிப்ரவரி 10 புதன்கிழமை அன்று 96,973 ரூபாயாக இருந்தது. வியாழக்கிழமை காலை, அதன் விலை 97095 ரூபாயாக இருந்தது.
சந்தைக்கான கண்ணோட்டம் என்ன
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ்ஸின் படி, டயர் தொழில் இப்போது வளர்ச்சியைப் பெறும். அவர்களது மதிப்பீடுகளின்படி, 2022 க்குள், தொழில் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும். மூன்றாம் காலாண்டுளின் சிறந்த முடிவுகளும் மேன்மையான கண்ணோட்டமுமே டயர் பங்குகளில் முன்னேற்றத்திற்கான காரணமாகும். நிறுவன காலாண்டு முடிவுகள் சீராக மேம்படுகின்றன. வாகனத் துறையும் மீண்டும் வேகம் பெறுகிறது. இது டயர் விற்பனையை நல்ல முறையில் பாதித்துள்ளது. இத்துறை மேலும் முன்னேற வாய்ப்பு உள்ளது.
டயர் தொழிலின் வளர்ச்சி
மற்ற டயர் நிறுவனங்களைப் பற்றி பேசினால், Ceat 149 சதவீத வளர்ச்சியையும், அப்பல்லோ டயர் 155 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளன. கடந்த 1 மாதத்தில், Ceat 50 சதவீதமும், பால்கிருஷ்ணா 32 சதவீதமும், அப்பல்லோ டயர் 31 சதவீதமும், MRF 18 சதவீதமும், TVS Srichakra 15 சதவீத ரிடர்ணைப் பெற்றுள்ளன.
எம்.ஆர்.எஃப் பதற்றத்தை ஏற்படுத்தியது
MRF-ன் மதிப்பு 1 லட்சத்தை தாண்டினால், அது BSE-க்கும் பதற்றத்தை அதிகரிக்கும். ஏனெனில் பங்குச் சந்தையில் (Markets) பங்குகளின் விலைக்கான டிஸ்ப்ளே 5 இலக்கங்கள் மட்டுமே கொண்டுள்ளது. இப்போது MRF 1 லட்சம் என்ற அளவை கடப்பதற்கு முன்பு, BSE விரைவில் 6 இலக்க டிஸ்ப்ளேவுக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். MRF-இடம் அதன் பங்குகளை பிரிப்பதற்கான, அதாவது, stock split செய்வதற்கான ஒரு ஆப்ஷனும் உள்ளது.
ALSO READ: Budget 2021: பங்குச்சந்தையில் தொடரும் கொண்டாட்டம், 50000 புள்ளிகளை தக்கவைத்தது Sensex
Stock Split என்றால் என்ன
Stock split என்றால் பங்கு பிளவு என்று பொருள். பங்குப் பிரிவின் கீழ், நிறுவனம் அதன் போர்ட் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அதன் பங்குகளை பிரிக்கிறது. ஒரு நிறுவனத்தின் பங்குகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்போது சிறிய முதலீட்டாளர்கள் அந்த பங்குகளில் முதலீடு செய்ய முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் தனது பங்குகளில் சிறு முதலீட்டாளர்களைக் கொண்டுவர பங்குப் பிளவு என்ற யுக்தியைப் பயன்படுத்துகிறது.
MRF பங்குகளைப் பொறுத்தவரை, அதன் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் அதில் முதலீடு செய்திருந்தால், இப்போது அவர் கோடீஸ்ர்வரர்!! ஆனால், அவர் இத்தனை ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்திருக்க வேண்டும். 2009 மே மாதம் முதல் 2019 மே மாதம் வரை MRF பங்குகள் 2,210 சதவீதம் வளர்ந்ததாக BSE தரவு தெரிவிக்கின்றது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் 66,000 என்ற நிலையில் இருந்த MRF பங்குகள் இப்போது 93,000 என்ற அளவில் உள்ளன.
MRF மட்டுமல்ல, பங்குச்சந்தையின் எந்த ஒரு நல்ல பங்கிலும், பொறுமை காத்தால் பெரிய அளவிலான நன்மைகளை கண்டிப்பாக பெறலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR