இந்தியர்களையும் அவர்களுக்கு நகைகள் மீது இருக்கும் பிரியத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. தங்க நகைகள் மீது, பலருக்கு இன்னும் பெரிய ஆர்வம் இருந்தாலும் பலர் ஃபேஷன் ஜுவல்லரி மீது ஆர்வம் கொண்டுள்ளனர். தங்க நகை உற்பத்தியில் மட்டுமல்ல, ஃபேஷன் நகை உற்பத்தியிலும் இந்தியா முன்னோடியாக உள்ளது. இந்த தொழிலை எப்படி ஆரமபிக்கலாம்? இதற்கான முதலீடு என்ன? எவ்வளவு லாபம் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம்.
வீட்டில் இருந்தே ஃபேஷன் நகை வியாபாரத்தை எப்படி ஆரம்பிப்பது?
நிலையான வருமானம் இருப்பவர்கள், இடையில் சிறுதொழிலையும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். அதிலும், கடந்த சில ஆண்டுகளாக இணையதளம் மற்றும் ஆன்லைனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அதன் மூலமாகவும் சிறு தொழில்கள் அதிக வருமானத்தை ஈட்டி வருகின்றன. அப்படி ஆன்லைன் மூலம் நன்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழில், ஃபேஷன் ஜுவல்லரி. பெண்களுக்கு ஃபேஷன் நகை என்றால் அவ்வளவு பிரியம். மிடில் கிளாசில் இருப்பவர்கள் மட்டுமல்ல பணக்காரர்களாக இருப்பவர்களும் ஃபேஷன் நகைகளை அணிகின்றனர்.
வீட்டிலிருக்கும் பெண்கள், கலை ஆர்வம் உள்ளவர்கள், நகை மீது ஆர்வம் உள்ளவர்கள் என அனைவருமே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். இந்தியாவில், தங்களுக்கு பொருத்தமான, பிடித்த அணிகலன்களை வாங்கி அணிவதற்கு பல லட்சம் பேர் உள்ளனர்.
முதலீடு எவ்வளவு?
குழந்தைகளுக்கான நகை, மணப்பெண்ணிற்கான நகை, கலாச்சார நகை, ஃபேஷன் நகை, தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ற நகை, கையால் செய்யப்பட்ட நகை என பல தரப்பட்ட நகை உள்ளது. இதற்கான முதலீடு, நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் இடம், எந்ததெந்த தளங்களில் அதை தொடங்குகிறீர்கள், என்பதை பொறுத்து முதலீடும் அதன் வருமானமும் மாறுபடும். பொதுவாக, இதற்கு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆகலாம். குறைவாக அளவில் ஆரம்பித்தால் அதற்கும் குறைவாக ஆகலாம்.
மொத்த விற்பனையாளராக மாறுங்கள்:
உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வங்கி, மொத்த விற்பனையாளராக மாறலாம். இதனால் பொருட்களை குறைவான விலையில் மொத்தமாக வாங்கி, நல்ல விலைக்கு வெளியில் விற்கலாம். இதை சேமித்து வைக்க, பெரிய இடம் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் விற்கலாம்:
நகைகளைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்குவதற்கான மற்றொரு வழி, வீட்டிலேயே நகைகளைத் தயாரிப்பது. இதை விற்பதற்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தக வலைத்தளங்களை அணுகுவது நல்ல முடிவாகும். பல சிறு வணிக உரிமையாளர்கள் தங்களது பிராண்டை விளம்பரப்படுத்த, இ-ஸ்டோர் அமைப்பதற்கான செலவைக் குறைப்பதற்காக பிற கடைகளுடன் தொடர்பைத் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?
உங்களது கைவண்ணம்:
நகை செய்வதற்கு உங்களது தனித்திறமையும் மிகவும் முக்கியமாகும். கம்மல், கொலுசு, பிரேஸ்லெட், வலையல், செயின் என அனைத்து நகைகளையும் கையால் செய்யலாம். இதில், எது உங்களது திறமையை நன்றாக பறைசாற்றுவதாக இருக்கிறதோ அதை நன்றாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு வரும் நல்ல ரிவ்யூக்கள் உங்களை நன்கு வேலை செய்ய உத்வேகம் கொடுக்கும்.
தொழிலை வளர்க்க ஐடியா..
எந்த தொழிலாக இருந்தாலும், அதை நன்கு வளர்ப்பதற்கு தொழிலின் நற்பெயர் பெரிய பலமாக இருக்கும். ஆகையால் உங்களது தொழிலையும், பொருளையும் நன்கு வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை போல சிறு தொழில் செய்பவர்களிடம் உங்களுக்கு விளம்பரம் செய்யுமாறு கேட்கலாம். அனைத்து சமூக வலைதளங்களிலும் ஒரு கணக்கை தொடங்கி அதில் ரீல்ஸ், வீடியோ, பாேட்டோக்கள் ஆகியவற்றை பதிவிடலாம். இதனால் நகை மீது ஆர்வமுள்ளவர்கள் உங்களை ஈசியாக ரீச் செய்ய முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ