புதுடெல்லி: தங்கத்தில் முதலீடு செய்யும் பாரம்பரியம் இந்தியாவில் பாரம்பரியமானது. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுப்பது தங்கமும், நகைகளும் தான். தங்க நகைகளை அணிவது அழகுக்கு அணி சேர்ப்பது மட்டுமல்ல, அவசரகாலத் தேவைகளுக்கு எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காலத்தையே புரட்டிப்போட்டு, லாபமான தொழில்கள் நட்டத்தை சந்திக்கின்றன. இதுவரை பெரிதாக நினைக்கக்கூடப்படாத தொழில்கள் ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், அக்காலம், இக்காலம் என எக்காலத்திலும் தங்க விற்பனை உச்சத்தில் தான் இருக்கும் என்பதை எக்காளமிட்டு சொல்கிறது தங்க விற்பனை.
அதனால் தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போதும், தங்கத்தின் விலை உயர்கிறது. ஆனால் காலத்திற்கு ஏற்ப நகைகளை வாங்கும் பாரம்பரிய முதலீட்டு முறையைத் தாண்டியும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல மாற்று வழிகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன.
Also Read | இந்தி சீரியலை நிறுத்த தமிழ்நாட்டில் போர்க்கொடி ஏன்? காரணம் இதுதான்...
இந்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களின் (Sovereign Gold Bonds) 12 வது தொடரை மார்ச் மாதத்தில் அறிவித்தது. அதன் இரண்டாம் பதிப்பு இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
அரசின் தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 இன் இரண்டாவது பதிப்பு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மே 24 முதல் 2021 மே 28 வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியுடன் வெள்ளிக்கிழமையன்று கலந்தாலோசனை மேற்கொண்ட நிதியமைச்சகம் (Finance Ministry) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தங்க பத்திரத்தின் விலை அறிவிக்கப்பட்டது. இரண்டாவது தவணைக்கான தங்கப் பத்திர திட்டத்தின் வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு 4842 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கிராமுக்கு 48,420 ரூபாய்.
Also Read | One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்
முதலீட்டாளர்கள் ஆன்லைன் மூலம் தங்க பத்திர திட்டத்தில் (Gold Bonds) முதலீடு செய்தால், அவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, 10 கிராமுக்கு 500 ரூபாய் தள்ளுபடி இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் சந்தாவில், முதலீட்டாளருக்கு 10 கிராமுக்கு 48,420-500 = 47920 ரூபாய் என்ற விலையில் தங்கம் வாங்கலாம்.
MCXஇல் தற்போது 10 கிராம் தங்கம், 48400-48500 ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. அதாவது, தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் 10 கிராமுக்கு சுமார் 580 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இன்று அதாவது மே 24 முதல் மே 28 வரை, இந்த தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் மூன்றாம் பதிப்பு ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும். ஜூன் 8 ஆம் தேதி தங்க பத்திரங்கள் வெளியிடப்படும்.
Also Read | கோவிட் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க மதுரை ஜோடி செய்த சூப்பர் ஐடியா!
நீங்கள் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதை என்எஸ்இ, பிஎஸ்இ போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளில் இருந்து வாங்கலாம். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( Stock Holding Corporation of India) மற்றும் தபால் நிலையங்களிலிருந்து வாங்கலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்
தங்கப் பத்திரத் திட்டத்திம் 8 ஆண்டுகள் காலம் கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வட்டி செலுத்தும் தேதியில் பத்திரத்திலிருந்து முதலீட்டைத் திரும்பப் பெறும் தெரிவு உண்டு.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக 1 கிராம் தங்கத்தை வாங்கலாம். எந்தவொரு தனிநபரும் மற்றும் இந்து கூட்டுக் குடும்பமும் (HUF) அதிகபட்சமாக 4 கிலோ மதிப்பிலான பணத்தை வரை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் மற்றும் ஒத்த நிறுவனங்களுக்கான அதிகபட்ச கொள்முதல் வரம்பு 20 கிலோ ஆகும். பத்திரத்தை வாங்க KYC இருப்பது அவசியம்.
தங்கப் பத்திரங்கள் ஆண்டுக்கு 2.5% என்ற விகிதத்தில் வட்டி கொடுக்கின்றன, இது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
Also Read | இன்றைய ராசிபலன், 24 மே 2021: திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR