அரிசி பொரி தயாரிப்பு: ₹3.5 லட்சம் முதலீட்டில் ₹90,000 சம்பாதிக்கலாம்!

இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். எண்ணெய் இல்லாத தின்பண்டங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2023, 02:47 PM IST
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் விரும்பப்படும் துரித உணவாகும்.
  • ஆரோக்கியமான உணவு என்பதால் பலர் இதனை விரும்பி வாங்குகின்றனர்.
  • அரிசி பொரிக்கான தேவை அதிகரித்துள்ளது.
அரிசி பொரி தயாரிப்பு: ₹3.5 லட்சம் முதலீட்டில்  ₹90,000 சம்பாதிக்கலாம்! title=

ஆரோக்கியமான உணவுகளின் முக்கியத்துவத்தை, தற்போது அனைவரும் உனர்ந்துள்ளனர். எண்ணெய் இல்லாத தின்பண்டங்களின் தேவை இப்போது அதிகமாக இருக்கிறது. முதியவர்களை விட தற்போது இளையவர்கள் மத்தியில் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. அதனால்,  அரிசி பொரி பிஸினஸ் செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் விரும்பப்படும் துரித உணவாகும். இது ஆரோக்கியமான உணவு என்பதால் பலர் இதனை விரும்பி வாங்குகின்றனர். அதனால் இன்று, அரிசி பொரிக்கான தேவை அதிகரித்துள்ளது. பெரிய மால்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கூட இதனை பார்க்கலாம்

இச்சூழலில், சுகாதார உணர்வுள்ள நுகர்வோருக்கு ஏற்ற வகையில், அரிசி பொரி தயாரிக்கும் உற்பத்தி வணிகத்தில் (Business Idea) இறங்குவது, ஒரு லாபகரமான வணிக வாய்ப்பை அளிக்கிறது. கிராமோதய வேலை வாய்ப்பு திட்டத்திற்கான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) திட்ட விவரத்தின்படி, அரிசி பொரி உற்பத்தி இயந்திரத்தை நிறுவ ஆகும் செலவு விபரங்களை அறிந்து கொள்ளலாம்:

அரிசி பொரி உற்பத்தி யூனி அமைப்பதற்கான திட்டச் செலவு:

1. நிலம்: சொந்தம நிலம்

2. கட்டிடம் கொட்டகை (1000 சதுர அடி பரப்பளவில்) : ரூ. 2 லட்சம்

3. உபகரணங்களின் விலை: ரூ. 1 லட்சம்

4. மொத்த மூலதனச் செலவு ரூ. 3 லட்சம்

5.  பணி மூலதனம் ரூ. 55000

6. மொத்த திட்டச் செலவு: ரூ 3.55 லட்சம்

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் தக்காளி சாஸ் பிஸினஸ்!

KVIC திட்ட அறிக்கையின்படி, 100 சதவீத திறனை பயன்படுத்தி அரிசி பொரி உற்பத்தி செய்தால், ஆண்டு அரிசி பொரி உற்பத்தி 369 குவிண்டால்களாக இருக்கும். 1,200 ரூபாய் வீதம், 443,000 ரூபாய் மதிப்பிலான ஆண்டு உற்பத்தி இருக்கும்.

KVIC ஆனது மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பான அளவுகளின் அடிப்படையில் 100%, 60%, 70% மற்றும் 80%  உறப்த்தி திறனில் பின்வருமாறு பிரித்துள்ளது.

விற்பனையை பொறுத்தவரை 100%, 60%, 70% மற்றும் 80% திறனின்படி முறையே ரூ.5.53 லட்சம், ரூ.3.32 லட்சம், ரூ.3.87 லட்சம் மற்றும் ரூ.4.43 லட்சம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உபரி: 100%, 60%, 70% மற்றும் 80% திறனின்படி முறையே ரூ.1.10 லட்சம், ரூ.66,450, ரூ.77,530 மற்றும் ரூ.88,600.

எதிர்பார்க்கப்படும் நிகர உபரி: 100%, 60%, 70% மற்றும் 80% உற்பத்தி திறனில் முறையே ரூ. 91,000, ரூ. 46,000, ரூ. 58,000 மற்றும் ரூ. 69,000  என்ற அளவில் உபரி வருமானம் இருக்கும்.

மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழிலின் உதாரணத்தை வழங்குவதற்கான அனுமான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News