பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசாங்கத்தால் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டம், நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த முதலீட்டுத் தேர்வாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
நீண்ட கால சேமிப்பிற்கு PPF திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
பாதுகாப்பு மற்றும் வருமானம்
PPF திட்டம் அரசாங்க ஆதரவில் இயங்குவதால், பாதுகாப்பானது. அதோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கிறது. இதற்கு தற்போது 7.1% வட்டி கிடைக்கும் நிலையில், ஆண்டுதோறும் கூட்டு வட்டி வருமானம் கிடைப்பதால், நீண்ட கால முதலீட்டில் பணம் பன்மடங்காகிறது.
வருமான வரி விலக்கு
PPF EEE வகை வருமான வரி விலக்கின் கீழ் வருகிறது. அதாவது, இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு கிடைப்பதோடு வட்டி வருமானத்திற்கு வரி இல்லை. முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
முதலீட்டில் நெகிழ்வுத்தன்மை
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செயவதற்கான குறைந்தபட்ச வருடாந்திர வைப்புத் தொகை ரூ.500 மட்டுமே. மறுபுறம், அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ.1.5 லட்சமாக உள்ளது. இந்த நெகிழ்வான வரம்பு திட்டம் குறைவான சம்பளம் பெறும் சாமனியர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களைத் தேடும் சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
பிபிஎஃப் விதிகள்: நீட்டிப்பு வசதி
முதிர்ச்சிக்குப் பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎஃப் கணக்கை நீட்டிக்கும் வசதி உள்ளது. கணக்கை ஐந்து ஆண்டு இடைவெளியில் நீட்டிக்கலாம்.
இந்தத் திட்டத்தை 15 ஆண்டுகள் முதிர்ச்சிக்குப் பிறகு முதலீடு இல்லாமல் நீட்டித்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி இருப்பில் உங்கள் பிபிஎஃப் கார்பஸில் 7.1% வருடாந்திர வட்டி தொடர்ந்து கிடைக்கும். மறுபுறம், நீங்கள் அதை முதலீட்டுடன் நீட்டித்தால், வட்டியில் வட்டி சேர்க்கப்பட்டு வருமானம் பெருகும்.
முதலீடு இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தை நீட்டித்தால், வருடத்திற்கு ஒரு முறை உங்களுக்கு தேவையான தொகையைதிரும்பப் பெறலாம். ஆனால், நீங்கள் அதை முதலீட்டுடன் நீட்டித்தால், அதிகபட்சமாக முதலீட்டில் 60% தொகையை ஒரு வருடத்திற்கு ஒரு முறை திரும்பப் பெறலாம்.
PPF முதலீட்டின் 15+5+5 சூத்திரம்
PPF 15+5+5 சூத்திரம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதலீட்டு காலவரிசையைக் குறிக்கிறது. ஆரம்பத்தில், நீங்கள் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்கிறீர்கள். இது கட்டாய லாக்-இன் காலம். இந்த 15 ஆண்டு காலம் முடிவடைந்து திட்டம் முதிர்ச்சியடைந்ததும், உங்கள் விருப்பப்படி 5 ஆண்டுகள் என அதை நீட்டிக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது.
15+5+5 சூத்திரம் என்பது, சந்தாதாரர் முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டிக்கத் தேர்வுசெய்கிறார் என்பதாகும். இந்த நெகிழ்வுத்தன்மை மூலம் முதலீட்டாளர்கள் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு தொடர்ந்து தங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
PPF: 15 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பெரிய கார்பஸை உருவாக்க முடியும்
PPF மூலம் அதிக வருமானம் ஈட்டுதல்: 15 ஆண்டு திட்டம்
முதிர்வு காலம் (15 ஆண்டுகள்) வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் உங்கள் PPF கணக்கில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வைப்புத்தொகையை நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், நீங்கள் கணிசமான கார்பஸைக் குவிக்க முடியும். தற்போதைய ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தின் அடிப்படையில், கீழே கணக்க்கீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன:
ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ.1.50 லட்சம்
15 ஆண்டுகளுக்குள் மொத்த வைப்புத்தொகை: ரூ.22,50,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.40,68,209
முதலீடு இல்லாமல் பிபிஎஃப் திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால்:
முதலீடு செய்யப்பட்ட தொகை (15 ஆண்டுகளுக்குப் பிறகு): ரூ.40,68,209
5 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட வருமானம் (வருடாந்திர வட்டி 7.1%): ரூ.16,64,377
முதலீட்டின் மொத்த மதிப்பு (15+5 ஆண்டுகளுக்குப் பிறகு): ரூ.57,32,586
பிபிஎஃப் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால்
முதலீடு செய்யப்பட்ட தொகை (20 ஆண்டுகளுக்குப் பிறகு): ரூ.57,32,586
மதிப்பிடப்பட்ட வருமானம் 5 ஆண்டுகளில் (ஆண்டுக்கு 7.1% வட்டி): ரூ. 23,45,304
முதலீட்டின் மொத்த மதிப்பு (15+5 ஆண்டுகளுக்குப் பிறகு): ரூ. 80,77,890
PPF 15+5+5 சூத்திரத்தின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்து, பின்னர் கூடுதல் பங்களிப்புகளைச் செய்யாமல் இரண்டு முறை ஐந்து ஆண்டுகளுக்கு என 10 ஆண்டுகள் நீட்டித்தால், உங்கள் முதலீடு தொடர்ந்து வளரும். தற்போதைய ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்துடன். இந்த உத்தி 25 ஆண்டுகளில் (15+5+5 ஆண்டுகள்) ரூ.80,77,890 குறிப்பிடத்தக்க கார்பஸை உருவாக்க உதவும். இது கூட்டு வட்டியின் பலம்ன் கிடைப்பதால், உங்கள் PPF காலத்தை நீட்டிப்பதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம் .
PPF சேமிப்பை மாதாந்திர ஓய்வூதியமாக மாற்றுதல்
திரட்டப்பட்ட கார்பஸை PPF திட்டத்தில் விட்டுவிட்டு, உங்கள் செலவுகளைச் சமாளிக்க வருடாந்திர வட்டியை மட்டும் (தற்போதைய 7.1% விகிதத்தில்) எடுக்க முடிவு செய்ததாக வைத்துக்கொள்வோம்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கார்ப்பஸ் (15+5+5 சூத்திரம்): ரூ. 80,77,890
ஆண்டு வட்டி (7.1%): ரூ. 5,73,530
மாதாந்திர திரும்பப் பெறுதல் (ஆண்டு வட்டி ÷ 12): ரூ. 47,794
இதன் மூலம் உங்களுக்கு தோராயமாக ரூ. 48,000 மாத வருமானம் கிடைக்கும், இதை நீங்கள் ஓய்வூதியமாகக் கருதலாம். ஆண்டுதோறும் ரூ. 1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, மேலும் 10 ஆண்டுகளுக்கு இந்தத் தொகை வளர அனுமதிப்பதன் மூலம், உங்கள் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளுக்கு நிலையான, வருமானத்தை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ