SBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

8500 பதவிகளுக்கு  பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பங்களை கோருகிறது.  கொரோனா காலத்தில் வேலை இல்லை என்று கவலைப்பட வேண்டாம்.  உடனடியாக sbi.co.in இல் விண்ணப்பிக்கவும். SBI Apprentice recruitment 2020க்கான தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளூங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Dec 1, 2020, 10:36 PM IST
SBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா? title=

SBI recruitment 2020: 8500 பதவிகளுக்கு  பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பங்களை கோருகிறது.  கொரோனா காலத்தில் வேலை இல்லை என்று கவலைப்பட வேண்டாம்.  உடனடியாக sbi.co.in இல் விண்ணப்பிக்கவும். SBI Apprentice recruitment 2020க்கான தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளூங்கள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India (SBI)) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் Apprentice ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. zeenews.india.com/tamil/topics/

 நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி நடத்தும் தேர்வின் மூலம் பல்வேறு மாநிலங்களில் 8,500 பயிற்சி பெற்றவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் (online) முறை மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். 2021 ஜனவரியில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழைப்பு கடிதம், தேர்வு முடிவு மற்றும் மொழி தேர்ச்சி சோதனை (language proficiency test) பற்றிய தகவல்களும் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

8500 காலியிடங்கள்
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் கீழ் 28 மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ (SBI ) வங்கியின் காலியிடங்கள் நிரப்பப்படும். மொத்தம் 1388 இடங்கள் பட்டியல் இனத்தை (Scheduled caste (SC)) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இன பழங்குடியினருக்கு (scheduled tribes (ST))  725, பின்தங்கிய வகுப்பினருக்கு (Other Backward class (OBC))   1948, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு (Economically Weaker Section (EWS)) 844, பொதுப் பிரிவுகளுக்கு 3595 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஒரு மாநிலத்தில் பணியாற்ற மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே தேர்வர்கள் தேர்வில் கலந்துக் கொள்ள முடியும்.

தகுதி: வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் இருந்து 2020 அக்டோபர் 31க்கு முன்னதாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2020 அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சம் 28 வயதாக இருக்க வேண்டும். அதாவது 01/11/1992 முதல் 31/10/2000க்கு இடையில் பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.  

எஸ்சி / எஸ்டி / ஓபிசி / பி.டபிள்யூ.டி (for SC/ST/OBC/PWD) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு வழிகாட்டுதல்களின்படி உயர் வயது வரம்பில் கொடுக்கப்படும் தளர்வுகள் பொருந்தும்.

Also Read | வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கிய SBI வங்கி- விவரம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News