SBI-ன் இந்த Scheme மூலம் நீங்கள் சேமித்த தங்கம் உங்களுக்காக இனி பணம் சேமிக்கும்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் பல பயன்களை அளிக்கின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2020, 02:20 PM IST
  • SBI-ன் தங்க வைப்புத் திட்டம் இரண்டு முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • குறுகிய கால வங்கி வைப்புகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 0.55 சதவீத வட்டி கிடைக்கும்.
  • SBI-ன் எந்தவொரு கிளையிலும் தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.
SBI-ன் இந்த Scheme மூலம் நீங்கள் சேமித்த தங்கம் உங்களுக்காக இனி பணம் சேமிக்கும் title=

தங்கம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்வது ஆகியவை இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது. தங்கம் ஒரு நல்ல முதலீடாக நீண்ட காலமாக காணப்பட்டு வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர். ஆனால், உங்கள் தங்கத்தை வங்கிகளில் வைத்திருப்பதற்கான பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், இன்றும் கூட மக்கள் தங்கத்தை யாரிடமும் கொடுக்க விரும்புவதில்லை, அது வங்கியாக இருந்தாலும் அதே எண்ணம்தான். ஆனால், தங்கத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு நாட்டின் அரசாங்கமும் வங்கிகளும் தொடர்ந்து மக்களிடம் முறையிடுகின்றன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI தங்கத்தில் முதலீடு (Investment) செய்பவர்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் பல பயன்களை அளிக்கின்றது.

இரட்டை நன்மை கிடைக்கும்

SBI-ன் தங்க வைப்புத் திட்டம் (Gold Deposit Scheme) இரண்டு முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, உங்கள் தங்கத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கியின் பொறுப்பாகும். அதே நேரத்தில், அதன் மூலமாக நீங்கள் பணம் ஈட்டவும் முடியும். பொதுவாக, நுகர்வோர் தங்களது தங்கம் வங்கிகளில் அப்படியே இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் வங்கியில் (Bank) வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் மூலமும் பணம் ஈட்ட முடியும் என்பதே உண்மை. அப்படிப்பட்ட திட்டம் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தங்க வைப்பு திட்டம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டம் (R-GDS) மூலம் தங்கம் மூலம் பணம் சம்பாதிக்கலாம். உண்மையில், தங்கத்தை வங்கியில் வைத்திருப்பதன் மூலம் வட்டி சம்பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. இத்திட்டத்தைப் பயன்படுத்த, நுகர்வோர் குறைந்தது 30 கிராம் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், தங்கத்தை டெபாசிட் (Gold Deposit) செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. சிறப்பு என்னவென்றால், தங்கத்தை தனி நபராகவும்ம் கூட்டாகவும் வைத்திருக்க முடியும்.

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

வைப்பு எவ்வளவு காலம்

SBI-ன் தங்க வைப்புத் திட்டத்தின் கீழ் 3 வகையான விருப்பங்கள் உள்ளன. இந்த மூன்று விருப்பங்கள் - குறுகிய கால வங்கி வைப்பு, நடுத்தர கால அரசு வைப்பு மற்றும் நீண்ட கால அரசு வைப்பு. முதலாவதாக, குறுகிய கால வங்கி வைப்புகளில், தங்கம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை வைக்கப்படுகிறது. நடுத்தர கால அரசு வைப்பில் 5 முதல் 7 ஆண்டுகள் வரை தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. தங்கம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட கால அரசு வைப்புத்தொகையில் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.

எவ்வளவு வட்டி பெறப்படுகிறது

குறுகிய கால வங்கி வைப்புகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 0.55 சதவீத வட்டி கிடைக்கும். 2 முதல் 3 ஆண்டுகள் முதலீடு செய்தால் 0.60 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும். நடுத்தர காலத்தில், தங்கத்திற்கு 2.25 சதவீதம் வரை வட்டி சம்பாதிக்கப்படுகிறது. நீண்ட கால அரசு வைப்புத்தொகையில் தங்கத்தை வைத்திருப்பதற்கு 2.50% வட்டி வழங்கப்படுகிறது.

தங்கத்தை டெபாசிட் செய்ய என்ன செய்ய வேண்டும்

SBI-ன் எந்தவொரு கிளையிலும் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், தங்கத்துடன், நுகர்வோர் தனது KYC ஐ வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு ஐடி ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம் தேவை. ஒரு படிவத்தை நிரப்பி, ​​தங்கம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் வைக்கப்படுகிறது. அந்தக் காலத்திற்கான வட்டியை நீங்கள் பெறுவீர்கள்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவலுக்கு, நீங்கள் SBI வலைத்தளத்தைப் பார்வையிடலாம். https://www.sbi.co.in/portal/web/personal-banking/revamped-gold-deposit-scheme-r-gds என்ற வலைதளத்திற்கு சென்று தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 

ALSO READ: SBI கார்டு மூலம் Amazon Pantry-யில் நீங்கள் ஆடர் செய்யும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News