SBI வங்கி கடன் மலிவானது!! அதன் பயனை எப்படி பெறுவது? முழு விவரம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 07:59 AM IST
SBI வங்கி கடன் மலிவானது!! அதன் பயனை எப்படி பெறுவது? முழு விவரம் title=

SBI Bank Loan: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ (Yono)  மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும்போதுதான் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும்.

எஸ்பிஐ படி, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சிபில் மதிப்பெண் (CIBIL scores) அடிப்படையில் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் ரூ .75 லட்சத்துக்கும் அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். 

இதுகுறித்து எஸ்பிஐ கூறுகையில், அதன் பண்டிகை சலுகையின் ஒரு பகுதியாக, ரூ .30 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் இரண்டு கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனில் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்தில் 0.20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். முன்பு இந்த தள்ளுபடி 0.10 சதவீதமாக இருந்தது. இந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். 

8 மெட்ரோ நகரங்களில் (Metro City) ரூ .3 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் யோனோ செயலி மூலம் கடன் பெற விண்ணப்பித்தால், 0.05 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ | மக்களே உஷார்! மோசடி ஆன்லைனில் மட்டுமல்ல, ATM மூலமும் நடக்கும்... எச்சரிக்கும் SBI!!

SBI வங்கி தற்போது ரூ .30 லட்சம் வரை 6.90 சதவீதம் என குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. ரூ .30 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகும்.

எஸ்பிஐ எம்.டி (ரைட் பேங்கிங்) சி.எஸ்.ஷெட்டி கூறுகையில், எஸ்பிஐயின் மலிவான வீட்டுக் கடன் (Home Loan) மூலம், வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவை நனவாக்க முடியும். இப்போது நாடு கோவிட் -19 க்கு பிந்தைய சுற்றுக்கு தயாராகி வருகிறது. நுகர்வோர் தேவை இப்போது மேம்பட்டு வருகிறது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கவர்ச்சிகரமான சலுகைகளை தொடர்ந்து வழங்கும். கடந்த மாதம், வங்கி தனது சில்லறை கடன் வாடிக்கையாளர்களுக்காக பல பண்டிகை சலுகைகளை அறிவித்தது. இதன் கீழ், யோனோ செயலி மூலம் கார், தங்கம் அல்லது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ALSO READ | SBI New offer: புதிய மொபைல் வாங்க 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News