தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மையளித்து கொண்டிருக்க, மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடப்பது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகின்றது. 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 13,951 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதில் ரூ. 76.49 கோடியில் ரூ.25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. யூபிஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் அதற்கெதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள டேட்டாவின்படி, ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.10.7 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!
மக்கள் அதிகளவில் யூபிஐ பரிவர்த்தனைகளை தொடங்கிவிட்டதால், மக்கள் அதனை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சில பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது, அதில் யூபிஐ பரிவர்த்தனை செய்யும்போது இந்த யூபிஐ பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி கூறியுள்ள ஆறு பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் பின்வருமாறு,
1) பணத்தைப் பெறும்போது நீங்கள் யூபிஐ பின்னை உள்ளிட வேண்டியதில்லை.
2) நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை சரிப்பார்க்கவும்.
3) தெரியாத கோரிக்கையை ஏற்க வேண்டாம்.
4) உங்கள் யூபிஐ பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
5) கியூஆர் மூலம் பணம் செலுத்தும் போது பயனாளியின் விவரங்களை எப்போதும் சரிபார்க்கவும்.
6) உங்கள் யூபிஐ பின்னை அடிக்கடி மாற்றவும்.
Always remember these UPI security Tips while using or making UPI transactions. Stay Alert & #SafeWithSBI. #SBI #AmritMahotsav #CyberSafety #CyberSecurity #StayVigilant #StaySafe pic.twitter.com/LMR9E9nJnG
— State Bank of India (@TheOfficialSBI) September 27, 2022
ஏற்கனவே எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களிடம் எஸ்ஓவிஏ மால்வேர் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த மால்வேர் ஒரு ஆண்ட்ராய்டு வங்கி ட்ரோஜன் மால்வேர் ஆகும், இது உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தகவல்களை திருடிவிடும். இது குறித்து ட்விட்டரில், 'தேவையற்ற ஆப்களை டவுன்லோடு செய்து உங்கள் விவரங்களை திருட அனுமதிக்காதீர்கள், நம்பிக்கையான மூலங்களிலிருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோடு செய்யுங்கள், விழிப்புடன் இருங்கள்' என்று தெரிவித்திருந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நம்பகமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும், தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்து ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Google Pay-ல் நெட்ஒர்க் பிரச்சனையா? இத பண்ணுங்க போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ