RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Reserve Bank of India MPC
2024 ஆம் ஆண்டின் கடைசி இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளியானது. ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 11 வது முறையாக 6.5% ஆகவே வைத்திருக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு முடிவெடுத்துள்ளது. நிதிக் கொள்கை குழுவின் மூன்று நாள் கூட்டம் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது.
பிப்ரவரி 2023 முதல் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையைப் பேணி வருகிறது. மறுசீரமைக்கப்பட்ட MPCயின் இரண்டாவது கூட்டம் இதுவாகும். ராம் சிங், சவுகதா பட்டாச்சார்யா மற்றும் நாகேஷ் குமார் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளி உறுப்பினர்கள் ஆவர்.
EMI -இல் என்ன தாக்கம் இருக்கும்?
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மாற்றாமல் அப்படியே தொடர முடிவெடுத்துள்ளதால், வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்களின் வட்டி, EMI குறையுமா அல்லது கூடுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். ஆர்பிஐ (RBI) ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளதால், இப்போதைக்கு வீட்டுக் கடன் அல்லது பிற கடன்களின் EMI இல் அதிகரிப்பு இருக்காது.
Repo Rate: ரெப்போ விகிதம் என்றால் என்ன?
ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் நம் அனைவரையும் பாதிக்கும். வீடு அல்லது கார் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு ரெப்போ விகிதம் EMI-யில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ரெப்போ விகிதம் வங்கிகள் கடன் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த விகிதத்தை அதிகரித்தால், வங்கிகள் மீது சுமை கூடும். இதனால் வாடிக்கையாளர்களின் வட்டி அளவும் அதிகரிக்கக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ