வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... நவம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

Bank Holidays in November 2023 : நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 29, 2023, 06:31 PM IST
  • 2023 நவம்பரில் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மாநில வாரியாக விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் நிதி சேவைகள் வழக்கம் போல செயல் படும்.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... நவம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! title=

Bank Holidays in November 2023: நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. நவம்பர் 2023 இல் பல வங்கி விடுமுறைகள் உள்ளன. இந்த மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், ஆனால் இந்த விடுமுறைகள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வங்கிக் கிளைக்குச் செல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செய்தியை கண்டிப்பாகப் படியுங்கள். நீங்கள் வங்கிக்குச் சென்று ஏமாறாமல் இருக்க, வங்கிக்குச் செல்வதற்கு முன், விடுமுறை நாட்களின் பட்டியலை கண்டிப்பாக சரிபார்க்கவும்.

விடுமுறைகளின் பட்டியல்

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிடுகிறது. நாடு முழுவதும் உள்ள வங்கிகள் நவம்பர் மாதத்தில் 15 நாட்களுக்கு செயல்படாது என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் உள்ள பல விடுமுறை நாட்கள் தேசிய அளவில் உள்ளன. மற்றும் சில உள்ளூர் நிலையிலான விடுமுறைகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறைகள் வேறாக இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வேலை தொடரும்

வங்கிகள் சில நாட்களுக்கு மூடப்பட்டிருந்தாலும், யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடரும். இந்த சேவைகள் விடுமுறை நாட்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கூடுதலாக, விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்பதை அறியவும்

நவம்பர் 1 (புதன்கிழமை) - கன்னட ராஜ்யோத்சவா/கர்வா சவுத்: கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 5, 2023 - ஞாயிறு (வார விடுமுறை)

நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை) - வாங்கலா திருவிழா: மேகாலயாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 11, 2023 - இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை)

நவம்பர் 12, 2023 - ஞாயிறு (வார விடுமுறை)

மேலும் படிக்க | 8th Pay Commission ஜாக்பாட் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு... அறிவிப்பு எப்போது?

நவம்பர் 13 (திங்கட்கிழமை) - கோவர்தன் பூஜை/லட்சுமி பூஜை (தீபாவளி)/தீபாவளி: திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 14 (செவ்வாய்கிழமை) - தீபாவளி (பாலி பிரதிபதா) /தீபாவளி/விக்ரம் சம்வத் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை - குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் ஆகியவற்றில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 15 (புதன்கிழமை) - (பாய் தூஜ்/சித்ரகுப்த ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை (தீபாவளி)/நிங்கோல் சக்கோபா/பிராத்ரி த்விதியா - சிக்கிம், மணிப்பூர், உத்தரபிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 19, 2023 - ஞாயிறு (வார விடுமுறை)

நவம்பர் 20 (திங்கட்கிழமை) - சாத் (காலை அர்க்யா) - பீகார் மற்றும் ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 23 (செவ்வாய்) - செங் குட்ஸ்னெம்/இகாஸ்-பாக்வால் - உத்தரகாண்ட் மற்றும் சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 25, 2023 - நான்காவது சனிக்கிழமை (வார விடுமுறை)

நவம்பர் 26, 2023 - ஞாயிறு (வார விடுமுறை)

நவம்பர் 27 (திங்கட்கிழமை) - திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகண்ட், ஹைதராபாத் - தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது தில்லி, பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 30 (வியாழன்) - கனகதாஸ் ஜெயந்தி - கர்நாடகாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு ஐடிபிஐ வங்கியின் தீபாவளி பரிசு... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News