இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, PUBG மொபைல் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதியாகியுள்ளது. PUBG மொபைல் இந்தியாவில் திரும்புவதாக PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்திய பயனர்களுக்காக ஒரு சிறப்பு விளையாட்டு தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், புதிய விளையாட்டை தொடக்குவதில், எந்த சீன (China) நிறுவனங்களுடனும் கூட்டாளித்துவம் வேண்டாம் என்று PUBG முடிவு செய்துள்ளது.
PUBG மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, நிறுவனம் இந்திய அரசின் தரவுக் கொள்கையை முழுமையாகப் பின்பற்றும் என PUBG கார்ப்பரேஷனின் அறிக்கை கூறுகிறது.
இந்திய கேமிங் துறையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் PUBG அறிவித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் (Krafton Inc), இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விளையாட்டு, இணைய விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறையில் செய்யப்படும் முதலீடாக இருக்கும்
ALSO READ | EVM எனப்படும் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா..?
இந்திய அலுவலகத்திற்கான PUBG கார்ப்பரேஷன் சமீபத்தில், கார்ப்பரேட் டெவலப்மென்ட் மேனேஜர் பதவிக்கு ஆள் தேவை என லிங்க்ட் இன்னில் (Linkedin) பதிவிட்டது. இந்த வேலைக்கு ஐந்து வருட அனுபவம் தேவை என அதில் கூறியிருந்தது.
செப்டம்பர் தொடக்கத்தில், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி, தரவு பாதுகாப்புக்காக பப்ஜி உட்பட 200 கேமிங் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இப்போது நிறுவனம் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்துள்ளது, இருப்பினும் இந்தியாவில் பப்ஜி மொபைல் தொடங்குவதற்கான சரியான தேதி என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
ALSO READ | Google Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR