ஜஸ்பிரித் பும்ரா காயம்! இந்த முக்கிய தொடர்களை இழக்க நேரிடும்?

Bumrah Injury: ஆஸ்திரேலியா தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபி உட்பட 4 தொடர்களை இழக்க வாய்ப்புள்ளது.

1 /6

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா வரவிருக்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

2 /6

பார்டர்-கவாஸ்கர் டிராபி முழுவதும் பும்ரா தனி ஒருவராக போராடினார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் 32 விக்கெட்களை வீழ்த்தினார்.

3 /6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்கேன் செய்த அவர், கடைசி நாளில் பந்துவீச வரவில்லை.

4 /6

இதனால் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது மற்றும் இந்தியா தொடரை இழந்தது. இந்நிலையில் முதுகில் வீக்கம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் ஸ்டேஜை பும்ரா இழக்க வாய்ப்புள்ளது.

5 /6

தற்போது ஜஸ்பிரித் பும்ரா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் பும்ரா உடல் தகுதி குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.  

6 /6

பும்ராவின் காயத்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தடுமாறி வருகிறது. அவருக்கு பதில் யாரை சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.