பிரதமர் மோடியின் இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை பலன் பெறலாம்! முழு விவரம்!

Pradhan Mantri Mudra Yojana: பிரதமர் மோடி மூலம் தொடங்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்கலாம் மற்றும் அதற்கான நிதியையும் பெறலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2023, 11:43 AM IST
  • இந்த திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்பாடுகிறது.
  • அதிகபட்சமாக மக்கள் 10 லட்சம் வரை பலன் பெற முடியும்.
  • இதன் மூலம் தொழில்முனைவோர் தங்கள் தொழிலை வளர்கலாம்.
பிரதமர் மோடியின் இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை பலன் பெறலாம்! முழு விவரம்! title=

முத்ரா யோஜனா: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், பல்வேறு பிரிவுகளின்படி மக்களுக்கு தொகை கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், மக்களுக்கு மூன்று வகையாக கடன் வழங்கப்படுகிறது. மூன்று வகைகளிலும் வெவ்வேறு கடன் வசதிகள் உள்ளன. மோடி அரசில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, இத்திட்டங்கள் மூலம் மக்கள் பல நன்மைகளையும் பெறுகின்றனர். அதே நேரத்தில், பிரதமர் மோடி மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்கலாம் மற்றும் அதற்கான நிதியையும் பெறலாம். இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா. இத்திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம், பல்வேறு பிரிவுகளின்படி மக்களுக்கு தொகை கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், மக்களுக்கு மூன்று வகையாக கடன் வழங்கப்படுகிறது. மூன்று வகைகளிலும் வெவ்வேறு கடன் வசதிகள் உள்ளன.

மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!

கடன் தொகை

- இந்தத் திட்டம் ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வணிகத்திற்காக மக்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.

- இதில் 'சிஷு' திட்டத்தின் கீழ், மக்களுக்கு 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

- இது தவிர, 'கிஷோர்' திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

- அதேசமயம் 5 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு 'தருண்' என்ற திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கலாம். இதன் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயன்கள்

- இத்திட்டத்தில் கடன் பெறுவதன் மூலம், மக்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை  நிறைவேற்ற முடியும்.

- இதன் மூலம் சிறு வணிகர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

- இதனுடன், கடன் தொகையுடன் மக்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவு செய்து வளர்க்கலாம்.

கடனைப் பெறுவது எப்படி? 

இந்தக் கடனைப் பெற கூடுதல் ஆவணங்கள், உத்தரவாதங்கள் அல்லது பாதுகாப்பைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. முத்ரா கடன்கள் வங்கிகள் மற்றும் NBFCகளால் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரரின் பொதுவான தகவல்கள் தொடர்பான ஆவணங்களைத் தவிர, முத்ரா கடனைப் பெறுவதற்கான உங்கள் வணிகத் திட்டத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும். விண்ணப்பதாரரிடம் இருந்து திட்ட அறிக்கைகள், எதிர்கால வருமானக் கணிப்புகள் தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றையும் வங்கி கேட்கலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வட்டி விகிதம் என்ன என்றால் முத்ரா கடனுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதம் இல்லை. ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த வட்டியை வசூலிக்கின்றன. வழக்கமாக வட்டி நிர்ணயம் என்பது கடன் தொகை மற்றும் வணிகத்தின் தன்மையைப் பொறுத்தது. முத்ரா கடன் 10-12 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் கிடைக்கும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை முதல் ரயில்களில் மிகப்பெரும் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News