Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் உள்ள நோட்டு கள்ள நோட்டா...

தற்போது வைரலாகும் தகவலில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2022, 06:26 PM IST
  • இணையதளங்களில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி பாடம் எடுக்கின்றன.
  • கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் உள்ள நோட்டு கள்ள நோட்டா... title=

கள்ள நோட்டுகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக வலைதளங்கள் தினமும் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. பல இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி பாடம் எடுக்கின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தற்போது வைரலாகும் தகவலில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது. வழக்கமாக, உண்மையான நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் தான், பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் என்று கூறப்பாட்டுள்ளது.

'காந்திஜியின் அருகில் பச்சைக் கீற்று போடப்பட்டிருக்கும் அந்த 500 ரூபாய் நோட்டுகள் போலி என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பவும் என்ற செய்தி பரவி வருகிறது ஆனால், இந்த செய்தியை சரிபார்த்தபோது அது போலியானது என தெரியவந்தது.

மேலும் படிக்க |IBPS Clerk 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, நாளை முதல் பதிவு துவக்கம் 

வதந்திகளுக்கு மத்தியில், PIB தனது தகவல் சர்பார்ப்பு கணக்கான PIB Fact Check என்னும் கணக்கில், இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் இரண்டு வகை நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என ட்வீட் செய்தது. மேலும் வைரலாகும் தகவல் போலியானது என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. PIB Fact Check, திட்டவட்டமாக, இரண்டு வகையான நோட்டுகளும் உண்மையான கரன்சி நோட்டுகள் என்று உறுதிபடக் கூறியது. 

போலியான, உண்மைக்கு புறம்பாம், பொய் செய்திகளை பரப்பும் படங்கள், வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு PIB கூறுகிறது. அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பின்னர் ஆதாரத்துடன் விளக்கம் வெளியிடப்படும். 

மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News