45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம்! விதிகளை மாற்றும் PFRDA!

PFRDA On National Pension Scheme : தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமிப்புகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பங்களிப்பாளர் 45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 22, 2024, 02:39 PM IST
  • என்பிஎஸ் திட்டத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு
  • வரிச் சலுகைகளுக்கு சிறந்த NPS திட்டம்
  • NPS திட்டத்தில் செய்யப்படும் புதிய மாற்றம்
45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம்! விதிகளை மாற்றும் PFRDA! title=

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது தன்னார்வ ஓய்வூதியத் திட்டங்களில் முக்கியமான ஒன்று. இது மக்களை சேமிக்க ஊக்குவிக்கிறது. சேமிப்பை எளிதாக்கவும், ஓய்வுக்குப் பின் பாதுகாப்பான வருமானத்தைப் பெறவும் அனுமதிக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இனிமேல், பங்குகளில் 50% வரை முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை அமைப்பான PFRDA, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய பதிப்பான NPS திட்டத்தில் இருப்பு வாழ்க்கைச் சுழற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% வரை ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்புகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கீழ், பங்களிப்பாளர் 45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம். தற்போது ஈக்விட்டிகளில் கிடைக்கும் லாபம் அதிகரித்து வருவதால், மக்களின் விருப்பம் இதில் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட்டுள இந்த முடிவு NPS பங்களிப்பாளர்களை ஈர்க்கக்கூடும்.

தற்போதைய விதியின் கீழ், 35 வயதிற்குப் பிறகு பங்குகளில் செய்யும் முதலீட்டின் பங்கு குறையத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன்னரே NPS மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்: பட்டியல் இதோ

NPS இருப்பு வாழ்க்கை சுழற்சி திட்டம்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் NPS இருப்பு வாழ்க்கை சுழற்சி திட்டத்தை (NPS Balance Lifecycle Scheme) அறிமுகப்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஆட்டோ தேர்வின் கீழ் கூடுதல் தெரிவு இருக்கும். இந்த தெரிவின் கீழ் பங்களிப்பாளர் 50% வரை பங்குகளுக்கு தனது நிதியை ஒதுக்கீடு செய்யலாம். ஆனால், இந்த வசதி 45 வயது வரை மட்டுமே இருக்கும்.

45 வயது வரை 50% பங்கு முதலீடு சாத்தியம்
அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய மாற்றத்தின் மூலம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் பங்கேற்பாளர்கள் 45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிக முதலீட்டுத் தொகையை ஒதுக்கும் வசதியைப் பெறுவார்கள். இந்த முதலீடுகளால், அவர்கள் ஓய்வு பெறும் வரை ஒரு நல்ல கார்பஸ் நிதியை உருவாக்கலாம் என்று PFRDA தலைவர் தீபக் மொஹந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (2024 ஜூன் 21, வெள்ளிக்கிழமை) பேசிய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) தலைவர் தீபக் மொஹந்தி, இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) 'புதிய சமச்சீர் வாழ்க்கை சுழற்சி நிதியை' கொண்டு வருவோம் என்று கூறினார். இது நீண்ட காலத்திற்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிக ஒதுக்கீடுகளை அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | EPF நிதியை NPS கணக்கிற்கு மாற்ற முடியுமா... சந்தேகமே வேண்டாம் - முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News