தீபாவளிக்கு முன்பே வெங்காயத்தின் விலையை மேலும் குறையும். அரசு தன்னிடம் இருப்பில், உள்ள ஒரு லட்சம் டன் வெங்காயத்தை சந்தையில் வெளியிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், வெங்காய சப்ளை அதிகரிப்பதால் விலைகள் மேலும் குறையும்
பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தன்னிடம் இருப்பில் உள்ள ஒரு லட்சம் டன் வெங்காயத்தை அரசு வெளியிடுகிறது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
வெங்காயத்தின் (Onion) விலையைக் கட்டுப்படுத்த, ஏற்றுமதியை நிறுத்தியதோடு, இறக்குமதி செய்யவும் நடவடிக்க்கை எடுக்கப்பட்டது என்று வேளாண் துறை அமைச்சர் தோமர் கூறினார். இப்போது தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ((NAFED) ஒரு லட்சம் டன் வெங்காயத்தை சந்தையில் வெளியிடுகிறது.
சென்னையில் (Chennai) வெங்காயத்தின் மொத்த விலை அக்டோபர் 24 அன்று ஒரு கிலோ ரூ .76 என்ற நிலையிலிருந்து கிலோ ரூ.66 ஆக குறைந்தது என்றும், இதேபோல், மும்பை, பெங்களூரு மற்றும் போபாலிலும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை ரூ .5-6 குறைந்து எனவும் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டியில் வெங்காயத்தின் தினசரி சப்ளை 530 டன்னுக்கு மேல் அதிகரித்துள்ளது. மும்பை சந்தையில், வெங்காயத்தின் சப்ளை 885 டன்னிலிருந்து 1,560 டன்னாக உயர்ந்துள்ளது. சென்னையில் தினசரி சப்ளை 1,120 டன்னிலிருந்து 1,400 டன்னாகவும், பெங்களூரில் 2,500 டன்னிலிருந்து 3,000 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
ALSO READ | LIC Jeevan Akshay: இந்த ப்ரீமியம் தொகையை செலுத்தி மாதம் 24000 பென்ஷன் பெறுங்கள்!!
கடந்த சில, வாரங்களாக வெங்காயத்தின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. வெங்காயம் என்பது பருவகால பயிர், இது இந்தியாவில் (India) ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயிரிடப்படுகிறது. மார்ச் மாத இறுதியில் பயிரிடப்படும் வெங்காயம் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் தொடக்கம் வரையிலான தேவையை பூர்த்தி செய்கிறது.
இடையில், புதிதாக, வெங்காய ஆகஸ்ட் மாதத்தில் தென் மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
அக்டோபர் நடுப்பகுதியில், ஆரம்ப காரிஃப் வெங்காயப் பயிரும் சந்தைகளுக்கு வர தொடங்குகிறது, நவம்பர் நடுப்பகுதியில், காரீப் பயிரின் மகசூல் காரீப் பருவத்தின் பிற்பகுதியில் வருகிறது. இந்த ஆண்டு, ஒரு மோசமான பருவமழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சுமார் 50 சதவீத காரீப் பயிர் பலத்த மழையால் சேதமாகியது
அதனால், வெங்காயத்தின் சப்ளை பாதிக்கப்பட்டு வெங்காயத்தின் விலைகள் அதிகரித்தன
பயிரிடப்பட்டுள்ள புதிய வெங்காய பயிர்கள் சந்தைக்கு வர மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும்.
ALSO READ | அபிநந்தன் விடுவிக்கப்பட்டது ஏன்... உண்மையை அம்பலப்படுத்திய பாகிஸ்தான் எம்பி...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR