மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?

Old Pension Scheme:  மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கை குறித்து அரசாங்கம் சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 02:12 PM IST
  • புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதில், ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
  • NPS என்பது பங்குச் சந்தையின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? title=

பழைய ஓய்வூதியத் திட்டம் - சமீபத்திய செய்தி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை  செயல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான் அரசாங்கத்தைத் தொடர்ந்து, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. மறுபுறம், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களவை தேர்தலுக்கு முன் இது குறித்து பரிசீலிக்கப்படலாம் 

புத்தாண்டுக்கு முன் வந்துள்ள இந்த செய்தியால் மத்திய ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசு இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எந்தத் துறையில் அமல்படுத்தலாம் என்று சட்ட அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சகம் உறுதியான பதில் எதையும் இன்னும் அளிக்கவில்லை.

பகவத் காரத் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்

முன்னதாக, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆகையால், வரும் நாட்களில் இது குறித்து சாதகமான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கடை வேலை; நேர்முகத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு 

சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது

அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பழைய ஓய்வூதியப் பிரச்சினை பெரியது என்று முன்னர் கூறியிருந்தார். இது குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. அங்கிருந்து பதில் கிடைத்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம், கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் உயர்த்தப்படும் அகவிலைப்படியும் கிடைக்கும். ஜனவரி 2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது. 

புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. NPS என்பது பங்குச் சந்தையின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெற, NPS நிதியில் 40 சதவிகிதம் முதலீடு செய்யப்பட வேண்டும். மீதமுள்ள 60 சதவிகிதப் பணத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இத்திட்டத்தில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டது. மேலும், தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) ஜனவரி 2004 முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. NPS என்பது பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் அதில் அகவிலைப்படி வழங்கப்படாது. இந்த காரணங்களால் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News