Noel Tata: இந்தியாவின் பெருமையாக, அடையாளமாக, உலகளவில் ஒப்பற்ற தொழிலதிபராக, பலருக்கு ஒரு உதாரணமாக, ஆதர்ஷ நாயகனாக வாழ்ந்து காட்டிய ரத்தன் டாடா காலமானதை அடுத்து வர்த்தக உலகம் தொடங்கி சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். டாடா குழுமத்திற்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், 'தி ஷொ மஸ்ட் கோ ஆன்' என்ற ஆங்கில கூற்றை போல, டாடா குழுமம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருகின்றது.
டாடா அறக்கட்டளை குழு வெள்ளிக்கிழமை நோயல் டாடாவை அதன் தலைவராக ஒருமனதாக நியமித்தது. அக்டோபர் 9 ஆம் தேதி இரவு காலமான ரத்தன் டாடாவுக்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 67 வயதான நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நோயல் டாடா பல ஆண்டுகளாக டாடா டிரஸ்ட்கள் உட்பட டாடா குழும நடவடிக்ககளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயல் டாடா ஏற்கனவே சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா டிரஸ்ட்கள் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் அதனுடன் இணைந்த அறக்கட்டளைகள் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் அதனுடன் இணைந்த அறக்கட்டளைகளை உள்ளடக்கியது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த அறக்கட்டளைகள், ரத்தன் டாடாவின் சமூக அக்கறை கொண்ட பரோபகாரத்தின் பாரம்பரியத்தில் ஒருங்கிணைந்தவை.
தற்போது, நோயல் டாடா, வாட்ச்மேக்கர் டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் துணைத் தலைவராக உள்ளார். டாடா குழுமத்தின் சில்லறை விற்பனை நிறுவனமான ட்ரெண்ட் (ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைட்டின் உரிமையாளர்) மற்றும் அதன் NBFC நிறுவனமான டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பின் தலைவராகவும் அவர் உள்ளார். நோயல் வோல்டாஸ் குழுவிலும் பணியாற்றுகிறார்.
நோயல் டாடா, டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். டாடா இன்டர்நேஷனல் என்பது வெளிநாடுகளில் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான டாடா குழுமத்தின் பிரிவாகும். அங்குதான் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2010-11ல் இந்த நியமனத்திற்குப் பிறகுதான் ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக நோயல் வருவார் என்ற ஊகம் தொடங்கியது. ஆனால், இந்த நிலையில், 2011-ம் ஆண்டு, தனக்கு பிறகு சைரஸ் மிஸ்ட்ரி தலைவராக இருப்பார் என்று ரத்தன் டாடா அறிவித்தார். ஆனால், 2016-ம் ஆண்டில் சைரஸ் மிஸ்ட்ரி டாடா சன்ஸின் தலைவராக நீக்கப்பட்டார். மீண்டும் ரத்தன் டாடாவே தலைவரானார்.
அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு நோயல் தான் டாடா சன்ஸின் அடுத்த தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு போதுமான அனுபவம் இல்லாததால் சந்திரசேகரன் தலைவர் ஆனார்.
மேலும் படிக்க | சாமானியர்களும் தொழிலதிபர் ரத்தன் டாடாவை ஏன் கொண்டாட வேண்டும்?
நோயல் டாடா: படிப்பு
நோயல் டாடா சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (யுகே) பட்டம் பெற்றார். பிரான்சில் INSEAD இல், சர்வதேச நிர்வாகத் திட்ட (IEP) படிப்பை படித்து முடித்தார். இதற்கு முன்னர் நோயல் இங்கிலாந்தின் நெஸ்லே நிறுவனத்துடன் பணிபுரிந்தார்.
நோயல் டாடா: குடும்பம்
ஐரிஷ் குடியுரிமை பெற்ற நோயல், டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக இருந்த பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் ஆலூ மிஸ்திரியை மணந்தார். அவர்களுக்கு லியா, மாயா மற்றும் நெவில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ