ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது, விதிகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், EPFO அமைப்பில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. EPFO 3.0 என்னும் வரைவு திட்டம் மூலம், ஊழியர்கள் பணத்தை எடுக்கும் விதிகள், மற்றும் ஊழியர்கள் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
EPF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள்
பிஎஃப் கணக்கில் இருந்து ஊழியர்கள் நேரிடையாக ஏடிஎம்மில் பணத்தை எடுக்கும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. இதற்கான புதிய விதிகள் அடுத்த ஆண்டு, அதாவது, 2025 ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPF கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு
அதே போன்று, EPF கணக்கில் ஊழியர்களின் தற்போதுள்ள 12% பங்களிப்பை அதிகரிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊழியர் தனது அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஆகியவற்றில் 12% பங்களிப்பு செய்யப்படுகிறது, இதில் 8.33% சம்பளம் ஓய்வூதிய நிதிக்கும், 3.67% EPF கணக்கிற்கும் செல்கிறது. இந்நிலையில், ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களுக்கான முன்மொழிவையும் மத்திய அரசு தயாரித்துள்ளது. இதன் கீழ், ஊழியர்களின் பங்களிப்பான 8.33% ஐ என்ற அளவை மேலும் அதிகரிக்கக் கூடும். எனினும், முதலாளியின் (நிறுவனத்தின்) பங்களிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. அதோடு, ஊழியர் எந்த நேரத்திலும் பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய நிதியை நிரப்புவதற்கான வசதியையும் பெறக் கூடும்.
EPFO முந்தைய நடைமுறை விபரங்கள்
EPFO 1.0: கணக்குகள் கணிணி அல்லாமல், ஆவணங்களாக பராமரிக்கப்படுகின்றன. விண்ணப்பம் மற்றும் திரும்பப் பெறுதல் ஆவணங்களை சமர்பிக்கும் செயல்முறை மூலம் செய்யப்பட்டது.
EPFO 2.0: EPFO டிஜிட்டல் மயமானது. ஆன்லைன் போர்டல் வசதி அமல்படுத்தப்பட்டது. பணியாளருக்கு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) அளிக்கப்பட்டது.
PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிகள்
உறுப்பினர், வேலையை இழந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு PF பணத்தில் இருந்து 75% வரை திரும்பப் பெறலாம். இதன் மூலம் வேலையில்லாத சமயத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். மீதமுள்ள 25% சதவிகித பணத்தை வேலையை விட்டு வெளியேறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு திரும்பப் பெறலாம். இது தவிர, வீடு கட்ட, மனை வாங்க, வீடு வாங்க, மருத்துவ சிகிச்சை, வீட்டுப் பராமரிப்பு, திருமண செலவு ஆகியவற்றுக்காக, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்த எடுக்கலாம்.
PF பணத்திற்கான வருமான வரி விதிகள்
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 5 வருட சேவையை முடித்த நிலையில், அவர் PF பணத்தை திரும்பப் பெற்றால், அவருக்கு வருமான வரி விதிஅக்கப்படுவதில்லை. ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து 5 வருட காலம் பூர்த்தியாகி இருக்கலாம். மொத்த சேவை காலம் குறைந்தது 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியாளர் 5 ஆண்டுகள் பணி முடிவதற்குள் பிஎஃப் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்தால், அதற்கு அவர் 10% டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதேசமயம் உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் 30% TDS செலுத்த வேண்டும். இருப்பினும், பணியாளர் படிவம் 15G/15H என்ற படிவத்தை சமர்ப்பித்தால் TDS எதுவும் கழிக்கப்படாது.
மேலும் படிக்க | PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ