Sun Transit in Sagittarius: மார்கழி மாத பலன்கள்: சூரியன் டிசம்பர் 15 அன்று தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
மார்கழி மாத பலன்கள்: மார்கழி மாதம் மிகவும் மங்களகரமான தமிழ் மாதமாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருமணங்களை நடத்தாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், இந்த காலத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் டிசம்பர் மாத பெயர்ச்சியில், மார்கழி மாதம் பிறக்கும் நிலையில், மார்கழி தனுர் மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம்: மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார் மார்கழி மாசத்தின் முக்கியத்துவத்தை ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் இவ்வாறு விளக்கியுள்ளார். அதிகாலையில், ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடுதல், திருமால் வழிபாடு என புண்ணிய பலன்களை சேர்க்கும் ஆன்மிக மாதமாக விளங்குவது மார்கழி மாதம்.
சூரிய பெயர்ச்சி பலன்கள்: சூரியன் 2024 டிசம்பர் 15ம் தேதி அன்று இரவு 09:56 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் பலன்கள் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பணமும் சேமிக்கப்படும். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம்: சூரியனின் சஞ்சாரம் மிதுன ராசியினருக்கு மகிழ்ச்சியான நாட்களை தரும். வேலை, தொழில், வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மத்தியில் வேலையில் உற்சாகம் காணப்படும். கடின உழைப்பும் திட்டமிடுதலும் நிதி நிலையை பலப்படுத்தும். பண வரவும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.
சிம்மம்: தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயம் கைக்கும். நீண்ட பயணங்களால், வேலையில், தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் சிறந்த திட்டங்களால் முன்னேறுவார்கள். இது அவர்களுக்கு நல்ல வெற்றியையும் பொருளாதார ஆதாயத்தையும் தரும். கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் தங்கள் இலக்குகளை அடைவார்கள்.
துலாம் : தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது, துலாம் ராசிக்காரர்களுக்கு பயணங்கள், மற்றும் நிதி ஆதாயங்கள் போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தையும், வியாபாரத்தில் லாபத்தையும், காதல் வாழ்க்கையில் பலத்தையும் தரும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வீர்கள். உறவுகள் வலுவடையும். நீண்ட பயணங்களால், திறமை மேம்படுவதோடு, புதிய வாய்ப்புகள் அமையும். இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமானது. உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும்.
விருச்சிகம்: தனுசு ராசியில் சூரியன் நுழைவதால் விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள். கடின உழைப்பின் பலன் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல திட்டங்கள் மற்றும் வியாபார கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பணத்தை சரியாகத் திட்டமிட்டால், சம்பாதிப்பதோடு சேர்த்து சேமிக்கவும் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடின உழைப்பால் முன்னேற்றம் அடைவார்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும், நிதி நிலையும் வலுவாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறவுகள் மேம்படும். வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். உங்கள் பணி பாராட்டப்படும் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் துறையில், அதிர்ஷ்டம் ஒவ்வொரு நிலையிலும் உங்களை ஆதரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.