Must Do These In December Before 2025 : நம் வாழ்க்கையை மாற்ற, புது வருடம் பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. டிசம்பரிலேயே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விடலாம்.
Must Do These In December Before 2025 : பலர், புது வருடம் பிறக்கும் போது தான் கண்டிப்பாக சில விஷயங்களை செய்ய வேண்டும் என தனக்குள் சில சத்தியங்களை எடுத்துக்கொள்வர். ஆனால், அதற்காக ஜனவரி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. டிசம்பரில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே, அடுத்த வருடத்திற்குள் உங்கள் வாழ்க்கை மாறிவிடும். அவை என்னென்ன தெரியுமா?
2024ஆம் வருடம் உங்களுக்கு எப்படிப்பட்ட வருடமாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்த வருடத்தில், இதுவரை நீங்கள் உங்கள் மனநலன் குறித்து அக்கறை செலுத்தவில்லை என்றால், இந்த மாதத்தில அது குறித்து நீங்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் வெற்றி பெற நினைக்கும் விஷயத்தை நோக்கி புதிதான முயற்சிகளை எடுக்க ஆரம்பியுங்கள். அதற்கு ஏற்ற பழக்க வழக்கங்களை பின்தொடர ஆரம்பியுங்கள்.
பிறரிடம் இதுவரை அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டிருப்பீர்கள். இனிமேலும், அப்படியே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.
தினசரி நாட்குறிப்பு, அல்லது வார குறிப்புகளை தொடங்க ஆரம்பியுங்கள். இது, உங்களுக்கு வெற்றிப்படிகளை ஏற உதவும்.
உங்கள் போனில் இருக்கும் தேவையற்ற ஆப்கள், வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை டெலிட் செய்யுங்கள். உங்களிடம் தேவையற்று இருக்கும் பொருட்களை கழித்து விட்டு, அதனை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த வருடம் உங்களுக்கு பலர், உதவி செய்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு நன்றியை தெரிவித்து விடுங்கள். யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள்.
இந்த வருடத்தில் உங்களுக்கு நடந்த விஷயங்களை, நீங்கள் வீடியோவாக போட்டோவாக எடுத்திருக்கும் விஷயங்களை, ஒரு புகைப்படத்தொகுப்பாக அல்லது வீடியோ தொகுப்பாக எடுத்து உங்கள் சமூக வலைதளங்களில் பகிரலாம்.