Actor Ajith Kumar Vidaamuyarchi Pongal 2025 Release : சினிமா ஒரு பக்கம், கார் ரேஸிங் ஒரு பக்கம் என பிசியான திரை பிரபலமாக வலம் வருகிறார், நடிகர் அஜித் குமார். இவர் படங்கள் எதுவும், கடந்த 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. இதையடுத்து, அடுத்த வருடம் ஒரே தேதியில் இவர் படங்கள் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த இரண்டு படங்கள்!
நடிகர் அஜித் நடிப்பில், கடைசியாக வெளிவந்த படம், துணிவு. இந்த படத்திற்கு அடுத்து, அவர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். இதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு, படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருவதற்கு பல காலம் பிடித்தது. இந்த நிலையில், சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது.
இதன் கூடவே சேர்த்து, அஜித் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் காட்சிகள், விடாமுயற்சி படத்தை விட வேகமாக படம்பிடிக்கப்பட்டன. இந்த நிலையில், இப்போது இரு படங்களுமே ஒரே பண்டிகை தினத்தில் வெளியாக போட்டி போட்டு நிற்கிறதாம்.
ஒரே நேரத்தில் ரிலீஸ்?
எந்த பெரிய ஹீரோக்களுக்குமே, பல ஆண்டுகளாக நடக்காத விஷயம், தற்போது அஜித்திற்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடித்திருக்கும் விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி படமும் ஒரே நேரத்தில் ரிலீஸாக பிளானிங்கில் இருக்கின்றனவாம். விடாமுயற்சி திரைப்படம், பாெங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் டீசர் வெளியான போதே, அதில் கடைசியில் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இவர்களின் முந்தைய ரிலீஸ் தேதி, மார்ச் மாதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
Gratitude beyond boundaries! The English version of the VIDAAMUYARCHI teaser is OUT NOW Embracing the overwhelming response from across the globe.
https://t.co/yfiZrXNUhE#Vidaamuyarchi In Cinemas worldwide from PONGAL 2025!#AjithKumar #MagizhThirumeni…
— Lyca Productions (@LycaProductions) December 1, 2024
கடுப்பான தயாரிப்பு நிறுவனம்!
அஜித் நடித்திருக்கும் இன்னொரு படம், குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என திட்டமிட்டு வந்திருந்தனர். ஆனால், இவர்களை கேட்காமல், விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருப்பது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
Looks like #GoodBadUgly - #VidaaMuyarchi Pongal Release confusion is still not over yet.. Ipdiye pona AK vs AK Clash dhan pola.. Hope both production houses comes to a Conclusion soon.. pic.twitter.com/XHR2CgkK9I
— Laxmi Kanth (@iammoviebuff007) November 30, 2024
இதையடுத்து, இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகலாம், அல்லது குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ