யாங்கோன்: போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாள் (annual International Day Against Drug Abuse and Illicit Trafficking) ஜூன் 26ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று மியான்மரில் 839 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோத போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு சட்டவிரோதமான போதைப்பொருட்களை வழங்கும் முக்கிய ஆதாரமாக மியான்மர் நீண்ட காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் 144 மில்லியன் டாலர் மதிப்புள்ள பெருமளவிலான போதை மருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில் ஓபியம், ஹெராயின், மெத்தாம்பேட்டமைன், மரிஜுவானா, கெட்டமைன் (opium, heroin, methamphetamine, marijuana, ketamine, crystal meth) உள்ளிட்ட போதை மருந்துகள் போடப்பட்டன. .
தீப்பிடித்த போதைமருந்துகள் கொளுந்துவிட்டு எரிந்தது. தீ கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக தகுந்த முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதிலும், வானை நோக்கி எழுந்த தீயின் ஜுவாலையினால் நிலைமை மோசமடையலாம் என்ற சூழ்நிலை உருவானது. உடனே தயாராக இருந்த தீயணைப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ALSO READ | தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு தியாகி பட்டம் சூட்டிய பாகிஸ்தான் பிரதமர்
கிழக்கு மியான்மரின் ஷான் மாநிலத்தின் தலைநகரான மாண்டலே, லாஷியோ மற்றும் டாங்க்கி ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் போதைப்பொருட்களை அழிக்கும் பணியை மேற்கொண்டனர்.
மியான்மர் அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகமும் (United Nations Office on Drugs and Crime) மே மாதத்தில் பெருமளவிலான போதைப் பொருள்களை கைப்பற்றியதாக அறிவித்திருந்தன.
ஏப்ரல் தொடக்கத்தில் முடிவடைந்த சுமார் ஆறு வார காலப்பகுதியில், ஷான் மாகாணத்தின் கிராமம் ஒன்றிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் 200 மில்லியன் மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) மாத்திரைகள் 18 டன் போதைப்பொருட்களைக் கைப்பற்றியது.
ALSO READ | சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்திய ராஜீவ் காந்தி
பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போரினால் பல அழிவுகளை சந்தித்துவரும் மியான்மருக்கு போதைப்பொருள் உற்பத்தியின் நீண்ட வரலாறு உண்டு. நாட்டின் சில இனப் பிரிவுகள் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த இனக்குழுக்கள் தொலைதூரங்களில் அமைந்திருக்கும் நாட்டின் பெரும் இடங்களை கட்டுப்படுத்துகிறது. கிளர்ச்சிகளுக்கு நிதியளிப்பதற்காக அவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மியான்மர் அரசு கூறுகிறது.
ஆனால், மியான்மரின் அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் சில பிரிவுகளும் போதைப் பொருள் வணிகத்தினால் லாபமடைவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபாட்டிற்கான சான்றுகள் உள்ளதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான UNODC இன் பிராந்திய பிரதிநிதி ஜெர்மி டக்ளஸ் கூறியுள்ளார்.
ALSO READ | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?
மியன்மர் நாட்டின் புவியியல் அமைப்பானது, பரந்த மலை மற்றும் காடுகள் நிறைந்தது. இங்கு போதைப் பொருட்களை மலிவாக உற்பத்தி செய்வதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்ல, மியான்மரின் எல்லைகளும் போதைப்பொருள் விநியோகத்திற்கு அதிக சாதகமாக உள்ளது. பிடிபடுவோம் என்ற அச்சம் அதிகமில்லாமல் மியான்மரில் போதைப்பொருள் உற்பத்தியும், அவற்றை அண்டை நாடுகளுக்கு விநியோகமும் தழைத்தோங்குவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்தின் எல்லைகள் சந்திக்கும் பகுதி Golden Triangle என்று அறியப்படுகிறது. செல்வத்தை கொட்டிக் கொடுக்கும் அபின் உற்பத்தி மற்றும் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஹெராயின் ஆகியவற்றை இந்த Golden Triangle வழியாக சுலபமாக கடத்துகின்றனர்.
அண்மை தசாப்தங்களில், போதைப்பொருள் உற்பத்தியனாது பல்வேறு வடிவங்களையும் எடுத்து, மெத்தாம்பேட்டமைன் போன்ற செயற்கை மருந்துகளுக்கு மாறியுள்ளது. இப்போது பென்டானைல் போன்ற செயற்கை ஓபியாய்டுகளின் (synthetic opioids) வரத்து அதிகரித்துள்ளது.