Twitter மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகும் மோடி அரசு நோட்டீஸ் அனுப்பியது

நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஏன் டிவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2020, 08:46 PM IST
  • Twitter மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகும் மோடி அரசு
  • ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக லே-வை காண்பித்த விவகாரத்தில் நோட்டீஸ்
  • இதற்கு முன்பு லே பகுதியை சீனாவின் பகுதியாக காட்டியபோது எழுந்த கண்டனங்களால் பிறகு வரைபடத்தை திருத்தியது டிவிட்டர்
Twitter மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகும் மோடி அரசு நோட்டீஸ் அனுப்பியது title=
புதுடெல்லி: நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஏன் டிவிட்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9ஆம் தேதியன்று அனுப்பப்பட்ட அந்த சட்டப்பூர்வமான நோட்டீஸ் லே-லடாக் (Leh-Ladakh) தொடர்பானது.
யூனியன் பிரதேசமான லடாக்-இன் (Ladakh) பகுதியான லே-வை (Leh) ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக காண்பித்த விவகாரத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and IT) இந்த நோட்டீஸை ட்விட்டருக்கு அனுப்பியுள்ளது. இதற்கு தகுந்த விளக்கத்தை டிவிட்டர் கொடுக்க வேண்டும். அல்லது சட்டரீதியிலான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தால், டிவிட்டரின் நிலை திண்டாட்டமாகிவிடும்.
ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக லே-வை (Leh)  காண்பிப்பது ட்விட்டர் வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சியாகும் என்று அமைச்சகம் தனது நோட்டீஸில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. டிவிட்டரின் இந்த போக்கு, லடாக் யூனியன் பிரதேசத்தில் லே (Leh) உள்ளதாக அறிவித்த இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என்று கூறபட்டுள்ளது.   
தவறான வரைபடத்தைக் காண்பிப்பதன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதித்த ட்விட்டர் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஏன் எடுக்கக்கூடாது என்று அந்த நோட்டீஸில் கேள்வி எழுப்பியுள்ள இந்திய அரசு, 5 வேலை நாட்களுக்குள், விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனது நோட்டீஸில் தெளிவாக ட்விட்டருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்பு, ட்விட்டர் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக லேயைக் காட்டியது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அண்ட்ஜ சமயத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகச் செயலாளர் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி-க்கு (Jack Dorsey) கடிதம் எழுதினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் அப்போது அந்த தவறை சரி செய்தது.   
ஆனால் யூனியன் பிரதேசமான லடாக்-இன் (Ladakh) பகுதியான லே-வை (Leh) ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக காண்பித்த வரைபடத்தை இன்னும் ட்விட்டர் சரிசெய்யவில்லை. இந்த விவகாரம் தற்போது டிவிட்டருக்கு எதிராக சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு வந்துவிட்டது.
 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News