இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்தவகையில் இன்று, ஜூலை 6 புதன்கிழமை , நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த சிலிண்டர் இந்த மாநிலத்தில் விற்கப்படுகிறது என்பதை பார்ப்போம். அத்துடன் இன்று டெல்லியில் இருந்து பாட்னா வரையிலும், லே முதல் கன்னியாகுமரி வரையிலும் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | பெற்றோர் / கணவன் / மனைவி வீட்டில் தங்கி HRA வரி விலக்கு கோர முடியுமா?
14.2 கிலோ கொண்ட வீட்டு சிலிண்டரின் விலை நிலவரம்
நகரம் | விகிதம் |
லே | 1249 |
ஐஸ்வால் | 1155 |
ஸ்ரீநகர் | 1119 |
பாட்னா | 1092.5 |
கன்னியாகுமரி | 1087 |
அந்தமான் | 1079 |
ராஞ்சி | 1060.5 |
சிம்லா | 1047.5 |
திப்ருகர் | 1045 |
லக்னோ | 1040.5 |
உதய்பூர் | 1034.5 |
இந்தூர் | 1031 |
கொல்கத்தா | 1029 |
டேராடூன் | 1022 |
சென்னை | 1018.5 |
ஆக்ரா | 1015.5 |
சண்டிகர் | 1012.5 |
விசாகப்பட்டினம் | 1011 |
அகமதாபாத் | 1010 |
போபால் | 1008.5 |
ஜெய்ப்பூர் | 1006.5 |
பெங்களூர் | 1005.5 |
டெல்லி | 1003 |
மும்பை | 1002.5 |
ஒரு வருடத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.168.50 வரை உயர்த்தப்பட்டது
கடந்த ஓராண்டில், டெல்லியில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.834.50ல் இருந்து ரூ.1003 ஆக அதிகரித்துள்ளது. 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை கடைசியாக 19 மே 2022 அன்று ரூ.4 உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் மே 7ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.999.50 ஆக இருந்தது. மார்ச் 22, 2022 அன்று ரூ.949.50 ஆக இருந்த எல்பிஜி சிலிண்டர் விலை மே 7 அன்று ரூ.50 ஆக உயர்ந்தது. அதேபோல் மார்ச் 22ம் தேதி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்தது. முன்னதாக, அக்டோபர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை, டெல்லியில் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.899.50 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய மாநிலங்களில் ஜூலை 6 ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை நிலவரம்
நகரம் | விகிதம் |
லக்னோ | 2130.50 |
டெல்லி | 2021 |
கொல்கத்தா | 2140 |
மும்பை | 1981 |
சென்னை | 2186 |
பெங்களூர் | 2108.50 |
டேராடூன் | 2067 |
ஜூன் மாதத்தில் எல்பிஜி விற்பனை 0.23 சதவீதம் அதிகரித்து 22.6 லட்சம் டன்னாக இருந்தது. இது ஜூன், 2020 உடன் ஒப்பிடும்போது 9.6 சதவீதம் அதிகமாகவும், அதேபோல் ஜூன், 2019 உடன் ஒப்பிடும்போது 27.9 சதவீதம் அதிகமாகவும், ஜூன், 2021 உடன் ஒப்பிடும்போது எல்பிஜி விற்பனை 6 சதவீதம் அதிகமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR