அரசின் பரிசு.. பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டம்: 2 ஆண்டுகளில் பம்பர் லாபம்!!

Saving Scheme For Women:  தபால் அலுவலகம் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து பெண்களும் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2023, 03:37 PM IST
  • இந்த கணக்கை யார் திறக்கலாம்?
  • 2 வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
  • இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
அரசின் பரிசு.. பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டம்: 2 ஆண்டுகளில் பம்பர் லாபம்!! title=

தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: நாட்டு மக்களுக்காக மோடி அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பல வகையான சேமிப்புத் திட்டங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். தபால் அலுவலகமும் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்திய அஞ்சல் அலுவலகத்தால் பல வகையான பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் அதிக ஆபத்து இல்லாததால் இவை மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் பெண்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து பெண்களும் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். நீங்களும் ஒரு பெண்ணாக இருந்து, உங்களுக்கான சரியான முதலீட்டு விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பெண்களுக்கான ஒரு சிறந்த திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த அஞ்சலக திட்டத்தில், பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்து பம்பர் ரிட்டர்ன் பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்தின் பெயர் மகிலா சம்மான் பத்திரம் (Mahila Samman Certificate) ஆகும். இந்தத் திட்டத்தில், பெண்கள் சிறிய முதலீடுகளைச் செய்து நல்ல லாபத்தைப் பெறலாம்.

பெண்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்

மகிளா சம்மான் பத்திர திட்டம் தபால் நிலையம் மூலம் இயங்கி வருகிறது. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்தால், பெண்களுக்கு எந்தவிதமான சந்தை அபாயத்தையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. இதில் அவர்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

இந்த கணக்கை யார் திறக்கலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீதம் என்ற நிலையான வட்டி வழங்கப்படும். இதன் மூலம், பெண்கள் எதிர்காலத்திற்காக சேமிக்கவும், தன்னம்பிக்கை பெறவும் முடியும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் திறக்கலாம்.

இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இத்திட்டம் கூட்டு வட்டியின் பலனை வழங்குகிறது மற்றும் வட்டியானது காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் அதிக லாபம் கிடைக்கிறது.

மேலும் படிக்க | ரிசர்வ வங்கி அளித்த நல்ல செய்தி: UPI-இல் இனி இதையும் செய்ய அனுமதி

2 வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதத்தில் அஞ்சலகம் வட்டியை வழங்கும். உதாரணமாக, ஒரு முறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 லாபம் கிடைக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் முதலீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.31,125 பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஜாக்பாட், ரயில்வே தந்த மிகப்பெரிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News