ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் மாணவர்களுக்கு வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளார். ஆனால் இந்த வசதியின் பலனை ஒரு சில குறிப்பிட்ட குழந்தைகள் மட்டுமே பெறுவார்கள். ஒடிசாவின் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை ரயில்வே அமைச்சர் வழங்கியுள்ளார். சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை அளித்தார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறினார். பூமி பூஜைக்குப் பிறகு, தான் மாணவர்களிடம் பேசியதாகவும், அப்போது மாணவர்கள், தாங்கள் வந்தே பாரத் ரயிலை வீடியோவில் பார்த்தோம் என்றும், அதிலிர்ந்து அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது என தெரிவித்ததாகவும் கூறினார்.
மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்?
மாணவர்களின் விருப்பத்தைப் பார்த்த மத்திய அமைச்சர், இந்த ரயிலில் 50 மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றார். இந்த 50 மாணவர்கள் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விரைவில் ஒடிசாவுக்கு இரண்டாவது வந்தே பாரத் கிடைக்கும்
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பூரியில் இருந்து ஹவுரா வரை பிரதமர் மோடி கடந்த 18ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதே நேரத்தில், ஒடிசாவுக்கு இன்னும் சில நாட்களில் மற்றொரு வந்தே பாரத் ரயில் பரிசாக கிடைக்கலாம் என இப்போது செய்திகள் வருகின்றன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் வரை செல்லும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான திட்டம் தயாராக உள்ளது
புவனேஸ்வரில் மாணவ மாணவிகளுக்கான இலவச வந்தே பாரத் ரயில் பயணம் பற்றித் தெரிவித்த ரயில்வே அமைச்சர், அதனுடன் ஒடிசாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலுக்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பூரியில் இருந்து புவனேஷ்வர், கட்டாக், தேன்கனல், அங்குல், சம்பல்பூர், ஜார்சுகுடா, சுந்தர்கர் வழியாக ரூர்கேலா வரை இயக்கப்படும். இதனால் மேற்கு ஒடிசா மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
வந்தே பாரத் ரயில்கள்
மோடி அரசாங்கம் ரயில் உதிரிபாகங்களுக்கான புதிய PLI அதாவது உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை நோக்கி செயல்படுவதால் வந்தே பாரத் ரயில்கள் அதிகளவில் உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டிருக்கும். வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஈர்க்கவும் இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவும் ரயில் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு PLI திட்டத்தை அரசாங்கம் வெளியிட உள்ளது.
இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | சிகரெட் பிரியர்களுக்கு ரயில்வே புதிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ