Income Tax: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். பழைய வரி விதிப்பின் கீழ், கடந்த நிதியாண்டில் முதலீடுகளை செய்த வரி செலுத்துவோர் இந்த வருமானத்தை தங்கள் ஐடிஆரில் காட்டுவார்கள். மாதச் சம்பளம் பெறுபவர்களும் வணிகத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்களும், அதற்கு வருமான வரி அடுக்குகளின்படி வரி செலுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதிக வரி செலுத்தாமல், வரியை சேமிக்கவும் பல வழிகள் உள்ளன. வரிச்சுமையை குறைக்க உதவும் அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வரியை சேமிக்க உதவும் வழிகளில், வருமானத்தை இணைப்பது, அதாவது க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்பதும் ஒரு சிறந்த வழியாகும். இந்த வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும். வரியை சேமிக்க இந்த வழியை பின்பற்ற நினைப்பவர்கள் இதற்கான விதிகளை பற்றி அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.
Clubbing of Income: இந்த வழியில் வரியை எப்படி சேமிப்பது என இங்கே காணலாம்.
- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 64(1)(ii) மற்றும் பிரிவு 64(1)(iv) இன் கீழ், ஒரு நபர் தனது மனைவியின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, அது ஏதேனும் வருமானத்தை (வட்டி, வாடகை, டிவிடெண்ட் போன்றவை) உருவாக்கினால், அந்த வருமானம் உங்கள் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். இது வருமானம் கூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.
- மனைவி மட்டுமல்லாமல், ஒருவர் தங்கள் வருமானத்தை ஒரு மைனர், மருமகள் அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட நபருடனும் இணைக்கலாம்.
இந்த பதிவில் உங்கள் மனைவியுடன் வருமானத்தை இணைப்பது பற்றி காணலாம்.
Clubbing of Income: இந்த முறையை எப்படி பயன்படுத்தலாம்
பரிசு வரி
- ஒருவர் தனது மனைவிக்கு எந்த தொகையை பரிசாக அளித்தாலும், அதற்கு பரிசு வரி விதிக்கப்படாது. இருப்பினும், கிளப்பிங் ஏற்பாடு இதிலிருந்து வரும் வருமானத்திற்கு பொருந்தும்.
முதலீடுகள் மூலம் வரியைச் சேமிப்பதற்கான வழிகள்
- உங்கள் மனைவிக்கு வருமானம் குறைவாகவோ அல்லது வருமானம் இல்லாமலோ இருந்தால், நிலையான வைப்புத்தொகை, மியூசுவல் ஃபண்டுகள் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்றவற்றில் அவரது பெயரில் முதலீடு செய்யலாம்.
- இதன் மூலம் வருமானத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யலாம்.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)
- நீங்கள் இருக்கும் வீடு உங்கள் மனைவியின் பெயரில் இருந்தால், நீங்கள் அவருக்கு வாடகையை செலுத்தி, HRA க்ளெய்ம் செய்யலாம். இது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்கும்.
சேமிப்புக் கணக்கிற்கு மாற்றவும்
- உங்கள் மனைவியின் சேமிப்புக் கணக்கில் (Savings Account) பணத்தை டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிக்கு வரியைச் சேமிக்கலாம்.
- சேமிப்புக் கணக்கின் வட்டிக்கு ரூ.10,000 வரை வருமான வரி விலக்கு கிடைக்கின்றது.
Clubbing of Income: இதற்கு என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் முதலீடுகளை உங்கள் மனைவியின் பெயரில் செய்யுங்கள்.
இதன் மூலம் இந்த முதலீடுகளால் கிடைக்கும் வருமானத்திற்கு குறைவான வரி விதிக்கப்படும்.
- கிளப்பிங் வசதியை சரியாக பயன்படுத்தவும்.
- HRA மூலம் வரியைச் சேமிக்க முயற்சி செய்யவும்.
மேலும் படிக்க | Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?
இவற்றில் அதிக கவனம் தேவை:
- வருமான வரிக் கண்ணோட்டத்தில் தவறான தகவல்களைத் தர வேண்டாம்.
- கிளப்பிங் விதிகளை புறக்கணிக்காதீர்கள், முறையாக பின்பற்றவும்.
- சரியான புரிதல் இல்லாமல் எந்த ஒரு நிதி ரீதியான முடிவையும் எடுக்க வேண்டாம்.
வரியைச் சேமிப்பது எப்படி?
1. திருமணம் செய்து கொள்ள உள்ளவர்கள், திருமணத்திற்கு முன், தங்கள் வருங்கால கணவன் / மனைவி பெயரில் ஏதேனும் சொத்து அல்லது அன்பளிப்பை அளித்தால், அது வருமானத்தை இணைக்கும் விதியின் கீழ் வராது.
2. உங்கள் மனைவிக்கு செலவுக்கு பணம் கொடுத்து அவர் அதை சேமித்தால் அதுவும் உங்கள் வருமானத்தில் சேராது.
3. ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகவும் வருமான வரியைச் சேமிக்கலாம். பிரிவு 80D இன் கீழ், உங்கள் குடும்பத்தின் பெயரில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் ரூ.25,000 வரை சேமிக்கலாம்.
4. உங்கள் மனைவிக்குக் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதன் மூலமும் வரியைச் சேமிக்கலாம். அவருக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கலாம். இதில் கடன் கொடுப்பதில் இருந்து வட்டி பெறுவது வரை அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். இது உங்கள் இருவரின் வருமானமும் இணைக்கப்படாமல் இருப்பதையும், உங்கள் வரிப் பொறுப்பு குறைக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
5. முதலீட்டு நோக்கத்தில் நீங்கள் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம். ஆனால் முதன்மை கணக்கு வைத்திருப்பவர் வரிப் பொறுப்பு குறைவாக உள்ளவராக இருக்க வேண்டும். ஏனெனில் கூட்டுக் கணக்கில், வட்டி மீதான வரிப் பொறுப்பை முதன்மை கணக்கை வைத்திருப்பவர் ஏற்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ