மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே வெளியிட்ட சூப்பர் டூர் பேக்கேஜ்

IRCTC Tour Package to DO DHAM: நீங்கள் நீண்ட நாட்களாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல பிளான் செய்துக் கொண்டிருந்தால், IRCTC தற்போது DO DHAM பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2024, 09:59 AM IST
  • டூர் பேக்கேஜின் முழு விவரம்.
  • டூர் பேக்கேஜின் கட்டண விவரம்.
  • டூர் பேக்கேஜ் எந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது?
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே வெளியிட்ட சூப்பர் டூர் பேக்கேஜ் title=

IRCTC Chardham Yatra Package Tour Package: உங்கள் வீட்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்து அவர்கள் புனிய ஸ்தலதிற்கு செல்ல ஆசைப் படுகிறார்கள் என்றால் கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும். இந்நிலையில் நீங்கள் நீண்ட நாட்களாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் (Kedarnath-Badrinath Yatra) செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தால், ஐஆர்சிடிசி (IRCTC) இன் இந்த DO DHAM (Do Dham) டூர் பேக்கேஜ் (Chardham Yatra Package) உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். உண்மையில், மே மாதத்தில், ரயில்வே அற்புதமான ஒரு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது, அதில் நீங்கள் இரண்டு தாம்கள் அதாவது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். எனவே இந்த டூர் பேக்கேஜின் முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

இந்த இணைப்பிலிருந்து டூர் பேக்கேஜின் முழு விவரங்களைச் சரிபார்க்கவும்: 

இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது?
இந்த சுற்றுலா தொகுப்பானது வருகிற மே 24 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

டூர் பேக்கேஜ் எந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது?
இந்த தோ தாம் டூர் பேக்கேஜானது கொல்கத்தாவில் இருந்து தொடங்கும்.

மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்.. வட்டியிலேயே பம்பர் லாபம் காணலாம்

டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
இந்த டூர் பேக்கேஜ் 51,100 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

பேக்கேஜ் கட்டணத்தின் முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
* இந்த பேக்கேஜில் சிங்கிள் ஷேரிங்கில் நீங்கள் ரூ.76,200 கட்டணம் செலுத்த வேண்டும்.
* அதேசமயம் ஒரு பயணிக்கு இரட்டை பகிர்வு கட்டணத்திற்கு ரூ.53,800 செலுத்த வேண்டும்.
* டிரிபிள் ஷேரிங்கில், ஒரு பயணிக்கு ரூ.51,100 கட்டணம் செலுத்த வேண்டிருக்கும்.
* 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தை உங்களுடன் சென்றால், குழந்தைக்கு தனியாக படுக்கையை எடுத்துக்கொண்டால், அதற்கு ரூ.36800 செலுத்த வேண்டியிருக்கும்.
* ஒரு குழந்தை உங்களுடன் சென்றால், நீங்கள் குழந்தைக்கு தனி படுக்கையை எடுக்கவில்லை என்றால், அவருக்கு ரூ 31800 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

டூர் பேக்கேஜ் எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்?
இந்த டூர் பேக்கேஜ் 7 இரவுகள் மற்றும் 8 பகல்களுக்கானது. டூர் பேக்கேஜில் நீங்கள் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

இந்த டூர் பேக்கேஜிற்கு பதிவு எங்கு செய்வது?
ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய, நீங்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

இந்த லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள்:
இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=EHA038A ஐப் பார்வையிடலாம்.

இந்த டூர் பேக்கேஜில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்?
* எகனாமி கிளாஸ் விமான டிக்கெட்
* பயணத்திட்டத்தின்படி ஹோட்டல் தங்குமிடம்
* தினமும் காலை உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும்
* பகிர்வு அடிப்படையில் சுற்றுலா வாகனம் மூலம் அனைத்து இடங்களையும் பார்வையிட வாய்ப்பு கிடைக்கும்.
* பயணக் காப்பீடு.

மேலும் படிக்க | சாதாரண ரயில் பயணிகளுக்கு ட்ரீட்! குறைவான ரயில் டிக்கெட் விலையில் சொகுசு பயணம் போகலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News