IPL 2021 Auction List: எந்த வீரர்கள், எந்த அணிக்கு விற்கப்பட்டனர்?

 ஐபிஎல் 2021 சீசனுக்காக வியாழக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், பல வீரர்கள் மிக அதிக விலைக்குப் போனால், சிலர் விலை போகவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2021, 08:10 PM IST
  • ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்றது
  • மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் கிறிஸ் மோரிஸ்\
  • சிவம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது
IPL 2021 Auction List: எந்த வீரர்கள், எந்த அணிக்கு விற்கப்பட்டனர்?  title=

IPL 2021 Auction Sold Unsold Players List: ஐபிஎல் 2021 சீசனுக்காக வியாழக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், பல வீரர்கள் மிக அதிக விலைக்குப் போனால், சிலர் விலை போகவில்லை.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான வீரராக சாதனை செய்தார்.  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டு ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு கிறிஸ் மோரிஸை வாங்கியது, இப்போது அவர் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

Also Read | IPL 2021 auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பட்டியல்

துபே-ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் நிறுவனம்4.40 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஐபிஎல் 2020இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் அணியில் இடம் பெற்றிருந்தார் சிவம். இவர்,  இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் 12 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மொயின் அலி - சென்னை சூப்பர் கிங்ஸ்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஐ.பி.எல் 2020 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த மொயின், இப்போது அவர் எம்.எஸ்.தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார்.

ஷாகிப் அல் ஹசன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பங்களாதேஷ் வீரர் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறுவனத்தால் 3.20 கோடிக்கு வாங்கப்பட்டார்.  

Also Read | IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை

க்ளென் மேக்ஸ்வெல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மேக்ஸ்வெல்லை வாங்க கடுமையாக முயன்றாலும், போதிய பணம் இல்லாததால், மேக்ஸ் வெல் கைநழுவிப்போனார்.
 
ஸ்டீவ் ஸ்மித்-டெல்லி கேபிடல்ஸ்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 2.2 கோடிக்கு விற்கப்பட்டார். ஸ்மித் முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தார்.  

முஸ்தாபிசூர் ரஹ்மான் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஆடம் மில்னே-மும்பை இந்தியன்ஸ்
ஜாய் ரிச்சர்ட்சன்-பஞ்சாப் கிங்ஸ்
பியூஷ் சாவ்லா - மும்பை இந்தியன்ஸ்

உமேஷ் யாதவ்-டெல்லி கேபிடல்ஸ்

Also Read | IPL Auction 2021: துவங்கியது IPL ஏலம், ஏலம் விடப்பட்ட முதல் வீரர் யார்? 

நாதன் கூல்டர் நைல்-மும்பை இந்தியன்ஸ்
முஸ்தாபிஸூர் ரஹ்மான்-ராஜஸ்தான் ராயல்ஸ்
சச்சின் பேபி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராஜச் பட்டிதர்-ஆர்.சி.பி.
ரிபல் படேல் - டெல்லி கேபிடல்ஸ்
ஷாருக்கான் - பஞ்சாப் கிங்ஸ்
கெளதம் -பஞ்சாப் கிங்ஸ்
ஷெல்டன் ஜாக்சன்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
லுக்மன் உசேன்-டெல்லி கேபிடல்ஸ்
சேதன் சாகரியா - ராஜஸ்தான் ராயல்ஸ்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News