குட் நியூஸ்... இந்த வருடம் 10% சம்பள உயர்வு லட்சியம்... 9% நிச்சயம்... அடித்து சொல்லும் சர்வே..!!

Salary Hike in India: இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இந்தியர்களின் சம்பளம் மிக அதிகமாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2024, 10:47 AM IST
  • இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டு 9.5% என்ற அளவில் சம்பள உயர்வை கொடுத்தன.
  • உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரமாக ஜொலிக்கும் இந்தியா.
  • இந்தியாவில் அதிக வளர்ச்சி காணும் துறைகள் எவை?
 குட் நியூஸ்... இந்த வருடம் 10% சம்பள உயர்வு லட்சியம்... 9% நிச்சயம்... அடித்து சொல்லும் சர்வே..!! title=

Salary Hike in India in Various Sectors: இந்தியர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இந்தியர்களின் சம்பளம் மிக அதிகமாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருகிறது. Korn Ferry நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டு 9.5% என்ற அளவில் சம்பள உயர்வை (Salary Hike) கொடுத்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது, ​​2024 ஆம் ஆண்டில் சராசரியாக 9.7% ஊதிய உயர்வு கொடுக்கும் என்று கூறுகிறது.-

உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரமாக ஜொலிக்கும் இந்தியா

கணக்கெடுப்பின்படி, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா (India) சம்பள உயர்வில் முதலிடம் வகிக்கும் நிலையில், வியட்நாம் 2024 இல் 6.7% சராசரி சம்பள உயர்வு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது (2023ம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 6.8%). இந்தோனேசியா ஊழியர்கள் 6.5% (2023ம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 6.4%) . ஜப்பானில் உள்ள ஊழியர்கள் 2.5% (2023ம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 2.7%) சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. கார்ன் ஃபெரியின் தலைவர் மற்றும் பிராந்திய நிர்வாக இயக்குநரான நவ்நீத் சிங், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு ஒளிரும் நட்சத்திரம் என்றும், உலகப் பொருளாதார மந்தநிலையில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மற்ற நாடுகளை விட முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் எந்தத் துறை அதிக வளர்ச்சி காணும்?

இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக கார்ன் ஃபெரியின் தலைவர் நவ்நீத் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், திறமையான பணியாளர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் நல்ல சம்பள உயர்வை அளிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். 2024 ஆம் ஆண்டில், நிதிச் சேவைகள், உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி) மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள், இரசாயனங்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் சில்லறை வணிகத் தொழில்களில் அதிகபட்ச சம்பள உயர்வு 10% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் IT சேவைகள் துறையில் மிகக் குறைந்த சம்பள உயர்வாக 7.8% என்ற அளவில் இருக்கும் என சர்வே தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | இந்த வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் புதிய உத்தரவு! உங்கள் வங்கியின் பெயர் உள்ளதா?

பலவேறு துறைகளில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு விபரம்

வாகனத்துறை (9.7%), கட்டுமானம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் துறை (9.6%), வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு துறை (9.5%) மற்றும் பயன்பாடுகள் (9.5%) உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சராசரி ஊதிய உயர்வாக 9% க்கு மேல் வழங்குகின்றன, அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் தொடர்பாக 706 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நிறுவனங்கள் 8.7% குறைந்த ஊதிய உயர்வுகளைப் கொடுக்க வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ. 5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News