EPFO அமைப்பு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 என்ற திட்டத்தின் கீழ், புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையை (CPPS) செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், 2024 டிசம்பரில் 68 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 1,570 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியம் விநியோகிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நாட்டிலுள்ள தங்கள் வசதிக்கேற்ப எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியத் தொகையைப் பெற முடியும்.
ஓய்வூதியதாரர்களுக்கு EPFO வழங்கியுள்ள முக்கிய வசதி
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கியமான வசதியை வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுக்க முடியும். 1995ம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறையை (CPPS) நாடு முழுவதும் செயல்படுத்தும் நடமுறையினை EPFO நிறைவு செய்துள்ளது. இதன் கீழ், 2024 டிசம்பர் மாதத்தில், EPFO புதிய அமைப்பின் கீழ், அனைத்து 122 ஓய்வூதிய விநியோக பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த 68 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 1,570 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியம் விநியோகிக்கப்பட்டது.
ஓய்வூதியக் கட்டண முறையின் முன்னோடித் திட்டம்
முன்னதாக, கடந்த கர்னால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பிராந்திய அலுவலகங்களில் 49,000 இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 11 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையின் (CPPS) முதல் முன்னோடித் திட்டம் 2024 அக்டோபர் மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பின்னர், 2024 நவம்பர் மாதத்தில் 24 பிராந்திய அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது., இதில் சுமார் 213 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியம், சுமார் 9.3 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
சிபிபிஎஸ் முழுமையாக அமல்படுத்தப்பட்டது ஒரு வரலாற்று மைல்கல்
நாடு முழுவதும் CPPS முறை அமபடுத்தப்பட்டது குறித்து அறிவித்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இபிஎஃப்ஓவின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட பென்ஷன் பேமென்ட் சிஸ்டம் (சிபிபிஎஸ்) முழுமையாக அமல்படுத்தப்பட்டது ஒரு வரலாற்று மைல்கல்" என்றார். இதன் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் வசதிக்கேற்ப நாட்டில் உள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும், எங்கும் தங்களுடைய ஓய்வூதியத்தை எளிதாகப் பெற முடியும். அவர்கள் பிஸிகல் வெரிஃபிகேஷனுக்காக எந்தக் கிளைக்கும் செல்லத் தேவையில்லை என்றார்.
ஓய்வூதியதாரர்களின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வரும் EPFO
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை அமலுக்கு வந்த பிறகு, ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணையை (பிபிஓ) மாற்றாமல் நாடு முழுவதும் உள்ள எந்தக் கிளையிலும் ஓய்வூதியத்தைத் திரும்பப் பெற முடியும். ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் பெரும்பாலான ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவும். ஓய்வூதியதாரர்களின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருவதாக EPFO தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் CPPS ஐ செயல்படுத்துவது இந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
மேலும் படிக்க | கடைசி காலத்தில் கூடுதல் பென்ஷன் வேண்டுமா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ