நாக சைதன்யா - சாய் பல்லவி நடிக்கும் தண்டேல்! வெளியான அதிரடி பாடல்!

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் வெளியானது.

Written by - RK Spark | Last Updated : Jan 6, 2025, 08:56 AM IST
  • தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள்.
  • நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல்.
  • இணையத்தில் பாடல் வைரல் ஆகி வருகிறது.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிக்கும் தண்டேல்! வெளியான அதிரடி பாடல்! title=

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் "புஜ்ஜி தல்லி" ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் "நமோ நம சிவாய" பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு  ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது. பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது.

இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம்  மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர். முன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு, சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

இப்பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த நடன அமைப்பு, பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும், சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார். "தண்டேல்" படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் படிக்க | 'இருங்க பாய்’ 2025ல் கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்!! யாரெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News