2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Pongal Holiday: ஜனவரி 14 பொங்கல் விழா வரவுள்ள நிலையில், ஜனவரி 17ம் தேதி கூடுதல் விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Jan 6, 2025, 06:53 AM IST
  • அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.
  • பொங்கல் வரவுள்ள நிலையில் அனைவருக்கும் உதவும்.
  • 6 நாட்கள் மக்களுக்கு மகிழ்ச்சி தான்.
2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!  title=

தமிழகம் இன்னும் ஒரு வாரத்தில் திருவிழா களமாக மாற உள்ளது. தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ளது. இந்த விழா மிகவும் உற்சாகத்துடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்படும். பொங்கல் விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான கூடுதல் பேருந்துகள், ரயில்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. தீபாவளி பண்டிகையைவிட பொங்கல் கொண்டாட ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் புதிய உடைகளை வாங்க ஏராளமானோர் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 'கிறிஸ்துவர்கள் ஓட்டு விஜய்க்கு போகக் கூடாது என உதயநிதி இதை செய்கிறார்' - ஹெச். ராஜா பளீர்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தை பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 15 மற்றும் ஜனவரி 16 மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் கொண்டாடப்படுவதால் அன்றும் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொங்கல் விடுமுறையில் சில மாற்றங்களை செய்து கூடுதல் விடுமுறையையும் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தொடங்கி, வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை!

முன்னதாக, தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 16 (வியாழன்) வரை மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்தது. இருப்பினும், வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாள் இருந்ததால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். அடுத்த 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) விடுமுறை என்பதால் இடையில் இருக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை ஏற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 2025 ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், ஜனவரி 17 அன்று வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட ஜனவரி 25 (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாள் விடுமுறை வர உள்ளதால் இதனை பயன்படுத்தி, சென்னை போன்ற வெளி ஊரில் வசிக்கும் பலர் பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். தமிழக அரசின் இந்த கூடுதல் விடுமுறை பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இது மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் பங்கேற்க போதுமான நேரத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க | கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News